அமைதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
'''அமைதி''' என்பதற்குப் பல பொருள்கள் தமிழில் உள்ளன எனினும் இக் கட்டுரையில் இது போர், பகைமை, வன்முறை என்பவற்றுக்கு [[எதிர்ச்சொல்]]லாகவே பயன்படுத்தபட்டுள்ளது. தற்காலப் பயன்பாட்டில் ''அமைதி'' என்பது, [[பகைமை]] இல்லாத ஒரு நிலையைக் குறிக்கும் ஒரு கருத்துருவாகும். பன்னாட்டு மட்டத்தில் இது [[போர்]] இல்லாத நிலையையும் குறிக்கும். ''குடிசார் ஒழுங்கின்மை இல்லாதநிலை'' எனவும் இதனை வரையறுப்பது உண்டு. தனிப்பட்டவர்கள் சார்பிலும் அமைதி என்னும் சொல் பயன்படுகிறது. இது, வன்முறைசாராத வாழ்வு என்னும் கருத்துருவுடன் தொடர்புள்ளது. இங்கே பிற மனிதருடனான தொடர்புகளும் [[மதிப்பு]], [[நீதி]], [[நல்லெண்ணம்]] என்பவற்றை அடிப்படையாகக் கொண்டிருப்பதைக் குறிக்கின்றன. இதே புரிதலின் அடிப்படையில், ஒருவர் தனது சொந்த உணர்வுகளின் அடிப்படையில் அமைதி பெறுதல் என்ற ஒரு நிலையும் உண்டு. இது மன அமைதி அல்லது நிம்மதி என்பதோடு தொடர்புபட்டது. பல வழிகளிலும், அமைதி என்பதன் அடிப்படையான பொருளில், முரண்பாடுகளின் மூலங்களாகப் [[பாதுகாப்பின்மை]], [[சமூகநீதியின்மை]], [[பொருளியல் ஏற்றத்தாழ்வு]] என்பன சுட்டிக்காட்டப்படுகின்றன. அமைதி என்பது முரண்பாடுகளின் முடிவைக் குறிக்கும் ஒரு இலட்சிய நிலை எனலாம்.
 
[[மகாத்மா காந்தி]]யின் கூற்றுப்படி, ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்றில் வன்முறைகள் இல்லாமல் இருந்தாலும், சமூகநீதி இன்மை காரணமாக அங்கே அமைதி இருப்பதாகக் கூறமுடியாது. காந்தி, அமைதி குறித்த ஒரு நோக்கைக் கொண்டிருந்தார். நீதி என்பது அமைதிக்கு அடைப்படையானதும்அடிப்படையானதும் கட்டாயமானதுமான அம்சம் என்று அவர் கருதினார். இதன்படி, அமைதிக்கு வன்முறை இல்லாமை மட்டுமன்றி, நீதி இருக்கவேண்டியதும் அவசியம்.
 
== சொல்லிலக்கணம் ==
"சமாதானம்" ('peace') என்ற வார்த்தை ஆங்கிலோ-பிரெஞ்சு பெஸ் (Anglo-French ''pes'') மற்றும் [[பிரெஞ்சு]] ''pais'' "சமாதானம், நல்லிணக்கம், மௌனம், உடன்பாடு" (11 ஆம் நூற்றாண்டு) ஆகியவற்றைக் குறிக்கிறது. <ref>Online Etymology Dictionary, [http://www.etymonline.com/index.php?term=peace&allowed_in_frame=0 "Peace"].</ref> ஆனால், பெஸ் ('pes'') தன்னை [[லத்தீன்]] வார்த்தை (''pax'') பாக்ஷ் இருந்து வருகிறது , அதாவது "சமாதானம், உடன்பாடு, சமாதான உடன்படிக்கை, அமைதி, விரோதப் போக்கு, ஒற்றுமை இல்லாதது." யூத வார்த்தையின் கூற்றுப்படி, [[ஹீப்ரூ]] வினைச்சொல்லிலிருந்து 'முழுமையான, முழுமையானது' என்று பொருள்படும் ஹீப்ரு வார்த்தையின் [[சலோம்]] மொழிபெயர்ப்பாக c.1300 இலிருந்து பல்வேறு தனிப்பட்ட வாழ்த்துக்களில் ஆங்கில வார்த்தை பயன்படுத்தப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/அமைதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது