சாஞ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 13:
 
'''சாஞ்சி''' [[இந்தியா]]வின் [[மத்தியப் பிரதேசம்]] மாநிலத்தில், [[ராய்சென் மாவட்டம்|ராய்சென் மாவட்டத்தில்]] உள்ள ஒரு சிறிய ஊராகும். இது மாநிலத்தின் நடுப்பகுதியில், [[போபால்|போபாலில்]] இருந்து வடகிழக்கே 46 கிலோமீட்டர் தொலைவிலும்; [[பெசுனாகர்]], [[விதிஷா மாவட்டம்|விதிசா]] ஆகிய இடங்களில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. கிமு மூன்றாம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 12 ஆம் நூற்றாண்டு வரையிலான பழமை வாய்ந்த பல பௌத்த [[நினைவுச்சின்னம்|நினைவுச்சின்னங்கள்]] இங்கேயுள்ளன.<ref>[http://personal.carthage.edu/jlochtefeld/buddhism/sanchi/intro.html Sanchi Stupa--A World Heritage Site]</ref>
== வரலாறு ==
சாஞ்சியில் உள்ள பெரிய தூபி தொடக்கத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டையண்டி பேரரசன் [[அசோகர்|அசோகனால்]] கட்டுவிக்கப்பட்டது. இது [[புத்தர்|புத்தரின்]] நினைவுப் பொருட்களின் மீது அமைக்கப்பட்ட ஒரு அரைக்கோள வடிவமான செங்கல் கட்டுமானம் ஆகும். மௌரிய வம்சத்துக்குப் பின் வந்த குஷானர்கள் போன்ற அவர்களுக்குப் பின்வந்த அரசர்கள் மேலும் பல தூபிகளைக் கட்டினர். முதல் தூபிக்கு மெருகூட்டப்பட்டது. தூபியைச் சுற்றி நான்கு பக்கங்களில் தோரண வாயில்களை அமைத்தனர். அதற்குப் பின் வந்த குப்த வம்சத்தினர் அங்கு புத்த மடாலயங்களையும் விகாரங்களையும் கட்டி, சாஞ்சியை மேலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாற்றினர். கி.பி.7-ம் நூற்றாண்டிலிருந்து 12-ம் நூற்றாண்டுவரை சாஞ்சி மிகவும் உன்னத நிலையிலிருந்தது. அதன்பின்னர் அதன் முக்கியத்துவம் படிப்படியாக குறைந்துபோனது.
 
கி.பி. 1818 இல் ஜெனரல் டெய்லர் என்ற ஆங்கிலேயர் பாதி புதைந்திருந்த சாஞ்சியைக் கண்டுபிடித்தார். 1912 இல் தொல்லியல் துறையின் பொது இயக்குநராக இருந்த ஜான் மார்ஷல் சாஞ்சியை முழுவதுமாகப் புதுப்பித்தார்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/society/kids/article22357489.ece | title=அழகிய சாஞ்சி | publisher=தி இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 சனவரி 3 | accessdate=3 சனவரி 2018 | author=அ. மங்கையர்கரசி}}</ref>
சாஞ்சியில் உள்ள பெரிய தூபி தொடக்கத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டையண்டி பேரரசன் [[அசோகர்|அசோகனால்]] கட்டுவிக்கப்பட்டது. இது [[புத்தர்|புத்தரின்]] நினைவுப் பொருட்களின் மீது அமைக்கப்பட்ட ஒரு அரைக்கோள வடிவமான செங்கல் கட்டுமானம் ஆகும்.
 
== இதனையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/சாஞ்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது