அவலோகிதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
அவலோகிதேஷ்வர என்ற சொல் மூன்று பகுதிகளால் ஆனது , அவ, என்றால் ''கீழே'' என்று பொருள். லோகித என்றால், ''பார்க்க'' என்று பொருள், 'ஈஷ்வரர்' என்றால் கடவுள் என்று பொருள். இந்த மூன்று சொற்களும் [[சமஸ்கிருதம்]] சந்தி விதிகளின் படி இணைந்து ''அவலோகிதேஷ்வரர்'' என்று ஆனது. இதற்கு ''கீழே (உலகத்தை) பார்க்கும் தேவன்'' என்று பொருள். திபேத்திய சொல்லான ''சென்ரெட்ஸிக்'' என்பதற்கு ''அனைது உயிர்களையும் பார்ப்பவர்'' என்று பொருள்
 
இந்தப் பெயரை [[சீனா|சீன]] பௌத்தர்கள் ''அவலோகிதேஸ்வரர்'' என்று தவறாக புரிந்து கொண்டு, இவரை ''உலகத்தின் அனைத்து ஒலிகளையும் கேட்பவர்'' (''குவான் யீன்'') என்று போற்றினாரென (ஸ்வர என்றால் ஒலி) என கருதியதாக கொள்ளப்பட்டது. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகளின் படி அவலோகிதேஸ்வரர் தான், இந்த போதிசத்துவரின் ஆதிமூல பெயர் என கருதப்படுகிறது. ஏனெனில் ''-ஈஷ்வரர்'' என்ற பின்னொட்டு சமஸ்கிருதத்தில் ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் காணக்கிடைப்பத்தில்லை. மேலும் ''அவலோகிதேஸ்வரர்'' என்ற சொல் ஐந்தாம் நூற்றாண்டும் பௌத்த சமஸ்கிருத படைப்புகளின் காணக்கிடைப்பது இந்த கருத்துக்கு வலுசேர்க்கிறது.
 
''அவலோதேஷ்வரர்'' மற்றும் ''அவலோகிதேஸ்வரர்'' ஆகிய இருச்சொற்களுக்கும் அடிச்சொல்லாகிய ''அவலோகித''(மேற்பார்வை) என்ற சொல்லைக்கொண்டே இந்த போதிசத்துவர் தமிழில் ''அவலோகிதர்'' என அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/அவலோகிதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது