கைலாய மாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
== காலம் ==
யாழ்ப்பாணத்தில் ஐரோப்பியர் ஆட்சி தொடங்குவதற்கு முன்பே இந்நூல் எழுதப்பட்டது என்பது யாழ்ப்பாண வரலாற்றாளர்களின் பொதுக் கருத்தாக இருந்தாலும், துல்லியமாக இதன் காலத்தை அறுதியிட்டுச் சொல்வதற்கான சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை.

போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்குச் சற்று முன்னர், 1604 ஆம் ஆண்டுக்கும் 1619 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், கைலாசநாதர் கோயில் கட்டப்பட்டு, இந்நூலும் எழுதப்பட்டிருக்கலாம் என்பது இராசநாயக முதலியாரின் கருத்து. காசி நகரத்துக் கங்காதரரை அனுப்பும்படி சேதுபதிக்குச் செய்தி அனுப்பிய தகவல் நூலில் காணப்படுகிறது. நாயக்க அரசன் [[முத்துக்கிருட்டின நாயக்கர்]], 1604 ஆம் ஆண்டில், உடையான் சேதுபதி எனப்படும் சடையப்ப தேவரை முதன் முதலாக இராமநாதபுரத்துக்குத் தலைவராக நியமித்தார் என்பதால், இந்நூல் அந்த ஆண்டுக்குப் பின்னர் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது அவரது வாதம்.
 
ஆனாலும், சேதுபதி என்னும் விருதுப் பெயர் நீண்ட காலமாகவே இருந்து வருவதாகவும், 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலேயே சேதுபதிகளுக்கும், யாழ்ப்பாணத்து அரசர்களுக்கும் தொடர்புகள் இருந்தன என்றும் பிற அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். கிபி 1260 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதலாம் ஆரியச் சக்கரவர்த்தி காலத்திலேயே இந்நூல் எழுந்திருக்கலாம் என்று சி. பத்மநாதன் கருத்து வெளியிட்டுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/கைலாய_மாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது