கைலாய மாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
 
கைலாயமாலையை அதன் உள்ளடக்க அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதற் கண்ணி தொடக்கம் 46 ஆவது கண்ணி வரையிலான முதற் பகுதி, செகராசசேகர மன்னனுக்கு முற்பட்ட கால நிகழ்வுகளைக் கூறுகிறது. கதிரமலையில் இருந்து அரசாண்ட வாலசிங்கன், நரசிங்கராசன் ஆகிய மன்னர்கள் குறித்தும்,
நரசிங்கராசனின் முன் யாழ்ப்பாணன் ஒருவன் யாழ் இசைத்து நகரொன்றைப் பரிசாகப் பெற்றது குறித்தும், அதனால் அந்நகர் யாழ்ப்பாணம் எனப் பெயர் பெற்றது குறித்தும், அந்நகரை யாழ்ப்பாணன் அரசாண்டு இறந்ததன் பின்னர் அது அரசனின்றித் தளம்பியது குறித்ததுமான செய்திகள் இப்பகுதியில் சுருக்கமாக இடம்பெறுகின்றன. 47 ஆம் கண்ணியிலிருந்து 211 ஆம் கண்ணிவரையிலானகண்ணி வரையிலான இரண்டாம் பகுதியில் செகராசசேகரனின் பெருமைகள், அவனை யாழ்ப்பாணத்தை ஆள அழைத்து வந்தமை, நல்லூர் நகரத்தை அமைத்து ஆட்சி செய்தது ஆகிய விடயங்கள் கூறப்படுகின்றன. இதற்குப் பிற்பட்ட மூன்றாம் பகுதி, செகராசசேகர மன்னன் கைலாயநாதர் கோயிலைக் கட்டிக் குடமுழுக்குச் செய்வித்தது தொடர்பான விடயங்களை உள்ளடக்குகிறது.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/கைலாய_மாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது