"காத்மாண்டு நகரச் சதுக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

539 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
[[2015 நேபாள நிலநடுக்கம்|2015 நேபாள நிலநடுக்கத்தில்]] இச்சதுக்கத்தில் இருந்த பல கட்டிடங்கள் பலத்த சேமடைந்து விட்டன. காத்மாண்டு தர்பார் சதுக்கத்தைச் சுற்றிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், அழகிய நேவார் கலைஞர்களாலும், கைவினைஞர்களாலும், கட்டப்பட்ட பௌத்தக் கட்டிடக் கலையுடன் கூடிய கட்டிடங்கள், கோயில்கள், தூபிகள் அமைந்துள்ளன.<ref name="Nepal Handbook By Tom Woodhatch">Nepal Handbook by Tom Woodhatch</ref>
 
காத்மாண்டு சமவெளியை ஆட்சி செய்த [[லிச்சாவி]], [[மல்லர் வம்சம்|மல்லர்]] மற்றும் [[ஷா வம்சம்| ஷா வம்சத்து [[கூர்க்காகோர்க்கா நாடு|கோர்க்கா]] மன்னர்கள் கட்டிய அரண்மனைகள், கோயில்கள், நகர வணிக வளாகங்கள், காத்மாண்டு தர்பார் சதுக்கத்தில் அமைந்துள்ளன. அரண்மனையை ஒட்டி, நகர மைய வணிக வளாகங்கள் எனப்படும் தர்பார் சதுக்கங்களும், முற்றவெளிகளும், கோயில்களும் அமைந்துள்ளன. அரண்மனையின் நுழைவு வாயில் முன், [[இராமன்|இராமனின்]] பக்தரான [[அனுமன்|அனுமனின்]] உருவச்சிலையும், அனுமன் நகர சதுக்கமும் அமைந்துள்ளன.
 
== வரலாறு ==
அனுமன் தோகா அரண்மனை வளாகமே காத்மாண்டு நகரச் சதுக்கம் என்றழைக்கப்படுகிறது. 19 வது நூற்றாண்டு வரை நேபாள மன்னர்கள் வசிக்கும் அரண்மனையாக விளங்கியது. மரவேலைப்பாடுகள் கொண்ட அழகிய சன்னல்கள் கொண்ட இந்த அரண்மனையில் திருபுவன் நினைவு அருங்காட்சியகம் மற்றும் மகேந்திர அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கு மன்னர்கள் வாழ்ந்த அறைகளையும், கூடங்களையும் காணலாம்.
 
இயற்கையின் சீற்றத்தால் சிதிலமடைந்த கோயில்களையும், அரண்மனைகளையும் அவ்வப்போது செப்பனிட்டு வந்தாலும், தற்போது பத்திற்கும் குறைவான கட்டிடங்களே காத்மாண்டு அனுமன் நகரச் சதுக்கத்தில் காணப்படுகிறது. காத்மாண்டு அனுமன் நகரச் சதுக்க அரண்மனை, அனுமன் தோகா அரணமனை அருங்காட்சியகம் எனும் பெயரில் மாற்றப்பட்டுள்ளது. அரண்மனை அருங்காட்சியகத்தில் உள்ள துளஜா கோயிலில் இந்து மற்றும் பௌத்த சமயத்தினரை மட்டும் அனுமதிக்கின்றனர். [[சிங்க அரண்மனை]] தற்போது அரசு அலுவலகங்களாக செயலபடுகிறது.
 
நகர சதுக்கத்தின் தெற்கு முனையில், ஒரு சிறுமியைத் துர்கையின் அம்சமாகத் தேர்ந்தெடுத்து குமரி எனும் பெயர் சூட்டி, தனி அரண்மனையில் (பூப்படைவது வரை) வைத்து வழிபடுகின்றனர்.
{{coord|27|42|14.67|N|85|18|25.5|E|region:NP|display=title}}
{{நேபாளத்தின் உலகப் பாரம்பரியக் களங்கள்}}
[[பகுப்பு:நேபாள வரலாறு]
[[பகுப்பு:காத்மாண்டு சமவெளி*|காத்மாண்டு சமவெளி*]]
[[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]]
[[பகுப்பு:நேபாளத்தின் உலகப் பாரம்பரியக் களங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2471300" இருந்து மீள்விக்கப்பட்டது