தி போஸ்ட் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"The Post (film)" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

12:17, 19 சனவரி 2018 இல் நிலவும் திருத்தம்

தி போஸ்ட் (The Post) என்பது 2017 ஆண்டு வெளியான அமெரிக்க அரசியல் விறுவிறுப்புப் படமாகும் [1][2] லிஸ் ஹன்னா மற்றும் ஜோஷ் சிங்கர் ஆகியோரால் எழுதப்பட்டு,  தயாரித்து இயக்கியவர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஆவார். இந்த படத்தின் நட்சத்திரங்களான மேரி ஸ்ட்ரீப்  கேதரின் கிராகாமாகவும்,   டொம் ஹாங்ஸ் பென் பிராட்லீயாகவும் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சாரா பால்சன், பாப் ஓடென்ரிக், ட்ரேசி லெட்ஸ், பிராட்லி வைட்ஃபோர்ட், புரூஸ் கிரீன்வுட், கேரி கூன், மற்றும் மேத்யூ ரைஸ் ஆகியோர் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளார். 1970களின் துவக்கத்தில் 30 ஆண்டுகள் நடந்த வியட்நாம் போர் குறித்து  தி வாஷிங்டன் போஸ்ட் ஆசிரியர் குழு, அமெரிக்கா – வியட்நாம் நாடுகளின் உறவு தொடர்பான சில ரகசிய ஆவணங்களைக் கைப்பற்றி, ‘பெண்டகன் பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் அடுத்தடுத்து செய்திகளை வெளியிடுவதற்கான முயற்சிகள் அதனால் ஏற்படும் சிக்கல்கள் என அப்போது உண்மையாக நடந்த கதையை அடிப்படையாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது.

படத்திற்கான துவக்க ஒளிப்படங்கள் 2017 மே மாதம் நியூயாரக் நகரில் எடுக்கப்பட்டன. திரைப்படமானது  2017 திசம்பர் 14 அன்று வாஷிங்டன், டி.சி. யில் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் அமெரிக்காவில் 2017 திசம்பர் 22, அன்று அமெரிக்காவில் குறைவான பகுதிகளில் வெளியிடப்பட்டது. பின்னர் அது 2018 சனவரி 12 அன்று பரந்த அளவில் வெளியிடப்பட்டு, உலகளவில் $ 33 மில்லியன் வசூலைப்  பெற்றது.

.[3]

மேற்கோள்கள்

  1. Travers, Peter (December 4, 2017). "10 Best Movies of 2017". Rolling Stone. பார்க்கப்பட்ட நாள் January 13, 2018.
  2. Damigella, Rick (January 2, 2017). "Political thriller gets Oscar buzz". CNN. பார்க்கப்பட்ட நாள் January 13, 2017.
  3. Rubin, Rebecca (December 11, 2017). "Golden Globe Nominations: Complete List". Variety. பார்க்கப்பட்ட நாள் December 11, 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_போஸ்ட்_(திரைப்படம்)&oldid=2473123" இலிருந்து மீள்விக்கப்பட்டது