திருக்குர்ஆன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 338:
அபுபக்கர் காலத்தில் திருகுர்ஆன் தொகுக்கப்பட்ட போதிலும், அது முழுமையான மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. மேலும் இது ஒரே புத்தக வடிவில் இல்லாமல், தனித்தனி அத்தியாயங்களாகவே தொகுக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து திருகுர்ஆனை கற்பிப்பதில் பல தவறுகள் ஏற்படத் தொடங்கின. குறிப்பாக மூன்றாவது [[கலீபா]]வான [[உதுமான்]] காலத்தின், [[ராசிதீன் கலீபாக்கள்|இஸ்லாமிய பேரரசு]] [[எகிப்து]] முதல் [[பாரசீகம்]] வரை பரந்து விரிந்திருந்தது. இந்த காலத்தில் பல பிரதேசங்களில் இருந்த கல்வியாளர்கள் தங்களுக்கு தெரிந்த அளவிலே திருகுர்ஆனை கற்பிக்க முற்பட்டனர். இது பல இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
 
இதனைத் தொடர்ந்து திருகுர்ஆனை தொகுக்கும் பணி மீண்டும் சைத் பின் சாபித்தால் தொடங்கப்பட்டது. முன்பு தொகுக்கப்பட்ட மூலப்பிரதிகளை ஹப்சாவிடம் இருந்து பெற்ற சைத் பின் சாபித், [[உதுமான்|உதுமானின்]] அறிவுரைப்படி அதை புத்தக வடிவில் தொகுக்கத் தொடங்கினார்<ref name="(மூன்றாவது கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஹஃப்ஸா (ரலி) அவர்கள் வசமிருந்த திருகுர்ஆன் பதிவுகளை வாங்கி வரச்செய்து, ஸைத் பின் ஸாபித், சயீத் பின் ஆஸ், அப்துல்லாஹ் பின் ஸுபைர், அப்துர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) ஆகியோரை (அழைத்து வரச்செய்து அவர் களிடம்) அவற்றை ஏடுகளில் பிரதியெடுக்கப் பணித்தார்கள்.">{{cite web | url=http://www.sahih-bukhari.com/Pages/Bukhari_6_61.php | title=சஹீஹ் புகாரி 6.61.507 | accessdate=சூலை 03, 2013}}</ref>. இதன் படி அளவில் பெரியதாக இருக்கும் அத்தியாயங்களில் தொடங்கி அளவில் சிறியதாக இருக்கும் அத்தியாயங்கள் வரை வரிசைக் கிரமமாக தொகுக்கப்பட்டன. பின்னர் இந்த வரிசையிலும் சிறிது மாற்றம் செய்யப்பட்டது. இறுதியாக தொகுக்கப்பட்ட திருகுர்ஆன், உதுமானால் அதிகாரப்பூர்வமான திருகுர்ஆன் பிரதியாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிற அத்தியாய வரிசைகளில் இருந்த மற்ற திருகுர்ஆன்கள் அழிக்கப்பட்டன.<ref name="எனவே, ஹஃப்ஸா (ரலி) அவர்கள் தம்மிடமிருந்த திருகுர்ஆன் பதிவை உஸ்மான் (ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் பின் ஸாபித் (ரலி), அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி), சயீத் பின் ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள்.">{{cite web | url=http://www.sahih-bukhari.com/Pages/Bukhari_6_61.php | title=சஹீஹ் புகாரி 6.61.510 | accessdate=சூலை 03, 2013}}</ref>.
 
தொடர்ந்த நாட்களில் மீண்டும் சைத் பின் சாபித்தின் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, புதிய திருகுர்ஆன் தொகுப்புகளை நகல் எடுக்கும் பணி தொடங்கப்பட்டது. இவ்வாறு நகல் எடுக்கப்பட்ட திருகுர்ஆன்கள் இசுலாமிய பேரரசின் பிற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதோடு, அவற்றில் இருந்து வேறு நகல்கள் எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டன.<ref name="எனவே, ஹஃப்ஸா (ரலி) அவர்கள் தம்மிடமிருந்த திருகுர்ஆன் பதிவை உஸ்மான் (ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் பின் ஸாபித் (ரலி), அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி), சயீத் பின் ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள்."/>.. இந்த திருகுர்ஆனின் நகல்களின் அடிப்படையிலேயே இன்றளவும் திருகுர்ஆன் தயாரிக்கப்படுகின்றன.
 
== பிற சேர்க்கைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/திருக்குர்ஆன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது