என். வி. நடராசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎உசாத்துணை: தாய்ப்பகுப்பு நீக்கம் using AWB
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[File:Dravidan Sep 3 1949.jpg|thumb|250px|என். வி. நடராசன் ஆசிரியராக இருந்த திராவிடன் இதழ்.]]
'''என். வி. நடராசன்''' (என். வி. நடராஜன், [[ஜூன் 12]], [[1912]] - [[ஆகஸ்ட் 3]], [[1975]] ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் [[திராவிட இயக்கம்|திராவிட இயக்கத்]] தலைவர் ஆவார். நடராசன் 1938-49 காலகட்டத்தில் [[நீதிக்கட்சி]]யின் (1944 முதல் [[திராவிடர் கழகம்]]) உறுப்பினராக இருந்தார். 1949ல் [[கா. ந. அண்ணாதுரை]] [[பெரியார்|பெரியார் ஈ. வே. ராமசாமியுடன்]] ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக தி.கவிலிருந்து வெளியேறி [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தை]] துவங்கிய போது அவருடன் சென்ற தலைவர்களுள் நடராசனும் ஒருவர். நடராசன் திமுகவின் ஐம்பெரும் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டார். (ஏனைய நால்வர் - அண்ணா, [[இரா. நெடுஞ்செழியன்]], [[கே. ஏ. மதியழகன்]], [[ஈ. வே. கி. சம்பத்]]). 1960 முதல் 1975 வரை திமுகவின் அமைப்புச் செயலாளராக பதவி வகித்தார். [[சென்னை மாநிலத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1957|1957]] மற்றும் [[சென்னை மாநிலத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1962|1962]] சட்டமன்றத் தேர்தல்களில் [[பேசின் பிரிட்ஜ்]] தொகுதியில் திமுக சார்பாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் 1964ல் [[தமிழக சட்டமன்ற மேலவை]]க்குத் தெர்ந்தெடுக்கப்பட்டார். [[சென்னை மாநிலத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1967|1967]]ல் திமுக வென்று ஆட்சியமைத்த போது அண்ணாவின் அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகப் பதவியேற்றார். 1975ல் இறக்கும் வரை அப்பதவியில் நீடித்தார். அவரது மகன் [[என். வி. என். சோமு]] பிற்காலத்தில் திமுக சார்பாக [[மக்களவை (இந்தியா)|இந்திய மக்களவை]]க்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/என்._வி._நடராசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது