க. பூரணச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{DISPLAYTITLE:க. பூரணச்சந்திரன் (பூரணச்சந்திரன் கணேசன்)}}
 
'''க. பூரணச்சந்திரன்''' ஒரு தமிழ் எழுத்தாளர். இலக்கிய விமர்சனம், கோட்பாட்டு ஆய்வுகள் ஆகியவற்றில் இவரது பங்களிப்புகள் முக்கியமானவை. தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். திருச்சிராப்பள்ளி, பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழ்த்துறையில் ஆசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். மார்க்சிய சிந்தனையுடன் கூடிய நல்ல திறனாய்வாளர். இலக்கியக் கொள்கையில் மிகுந்த ஆர்வம் காட்டி நூல்கள் பல எழுதியுள்ளார். இதழியல் துறையிலும் பணியாற்றி, அத்துறையிலும் நூல்கள் எழுதியுள்ளார். காலச்சுவடு, நிகழ், தமிழ் நேயம், மேலும் உள்ளிட்ட பல இலக்கிய இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். பல கருத்தரங்குகளை நடத்தி, நூல்களையும் தொகுத்துள்ளார். திருச்சியில் (1989) முதன்முதலில் பாதல்சர்க்காரின் பெயரால் நாடகப்பட்டறை நடத்தியவர். திருச்சியில் வாசகர் அரங்கம், திருச்சி நாடக சங்கம், சினிஃபோரம் (கலைத் திரைப்படங்களைக் காண்பதற்கான திரைப்படக் கழகம்) ஆகியவற்றில் பங்கேற்று, இத்துறைகளில் இளைஞர்களை முன்னேற்ற முயற்சி எடுத்தவர். பணிநிறைவுக்குப் பின் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எமரிடஸ் பேராசிரியராகப் பணியாற்றியதோடு, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்த் திறனாய்வு வரலாற்றினை வரைந்துகொடுத்தவர்.
 
சமுதாயத்தின்பால் தெளிந்த சிந்தனையோடு, அதன் வளர்ச்சிக்கு முற்போக்குச் சிந்தனைகளுடன் தன் முழு உழைப்பையும் ஓயாது அளித்து வருபவர். கல்லூரி வகுப்பறைகளாக இருப்பினும், கருத்தரங்குகளாக இருப்பினும் இவரது சொற்பொழிவுகள் தேர்ந்த ஞானத்தின் வெளிப்பாடு. தக்க தகவுடைய சான்றுகளுடன் ஐயமற விளக்கம் தரும் ஆற்றல் கொண்டவர். நல்ல விமரிசகர், சிறந்த மொழி பெயர்ப்பாளர்.
"https://ta.wikipedia.org/wiki/க._பூரணச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது