சியுசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

25 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
ஏக்னோர் என்னும் அரசனின் மகள் யூரோப்பா. அவள் மீது காமம் கொண்ட சியுசு வெள்ளைக் காளையாக மாறி அவளை சுமந்துக் கொண்டு கிரீட் தீவிற்கு சென்றார். பிறகு தன் உண்மையான உருவிற்கு மாறி யூரோப்பாவுடன் உறவாடினார். அதன் மூலம் மினோசு, ரடமந்தைசு மற்றும் சர்பெடான் ஆகியோர் பிறந்தனர். இவர்கள் மூவரும் பிற்காலத்தில் இறப்பின் நீதிபதிகளாயினர்.
 
சிறு கடவுள் எக்கோவுடன் சியுசு உறவாடிக்கொண்டிருந்தார். அதையறிந்த ஈரா சியுசை திரும்பி வருமாறு அழைத்தார். ஆனால் எக்கோ சியுசை செல்லவிடாமல் தொடர்ந்து அவருடன் பேசிக்கொண்டே இருந்தார். இதனால் கோபப்படும் ஈரா எக்கோவை மற்றவர்கள் கூறும் இறுதிச்சொற்களை மீண்டும் எதிரொலிக்குமாறு சாபம் வழங்கினார்.
 
டிரோசு மற்றும் கெல்லிர்வோயேவின் மகன் கானிமிடெ. அவன் மிகவும் அழகாக இருந்ததால் அவன்மீது காமம் கொண்ட சியுசு கழுகு உருவம் கொண்டு ஒலிம்பிய மலைக்கு கடத்திச் சென்று அவனுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார். பிறகு அவனுக்கு சாகா வரம் மற்றும் என்றும் இளமையாக இருக்கும் வரத்தை சியுசு அருளினார். பிறகு அவனை வானத்தில் கும்பம் என்னும் விண்மீன் கூட்டமாக அமர்த்தினார்.
913

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2484230" இருந்து மீள்விக்கப்பட்டது