"மாடர்ன் தியேட்டர்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

15 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
==குறிப்பிடத்தக்க ஆக்கங்கள்==
* மாடர்ன் தியேட்டர்ஸ் தான் தமிழ் திரைப்பட நிறுவனங்களுள் முதன் முதலில் 1960 களிலேயே 100 படங்களுக்கு மேல் எடுத்த நிறுவனம் ஆகும்.
 
* முதல் மலையாளப் படத்தை எடுத்த நிறுவனம்
 
* முதல் சிங்களப் படத்தை எடுத்த நிறுவனம்
 
* தமிழ் நாட்டில் முதல் ஆங்கிலப் படத்தை எடுத்த நிறுவனம்
 
* 1940இல் பி. யூ. சின்னப்பா நடித்த உத்தமப் புத்திரன் திரைப்படத்தில் முதன்முதலாக இரட்டை வேடம் அறிமுகமானது. அலெக்ஸாண்டர் டமாஸ்(Alexandre Dumas) என்பவரின் “The Man in the Iron Mask”ஐ தழுவி எடுக்கப்பட்டதே இத்திரைப்படமாகும்.
 
* 1942ஆம் ஆண்டில் பி. யூ. சின்னப்பா மற்றும் டி.ஆர் ராஜகுமாரி நடித்து வெளியான "மனோன்மணி" என்றத் திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் தயாரான முதல் தமிழ்த் திரைப்படமாகும்.
 
* தமிழில் வெளியான முதல் வண்ணத் திரைப்படம் (கேவா கலர்) 1956ஆம் ஆண்டு இந்நிறுவனத்தின் [[அலிபாபாவும் நாற்பது திருடர்களும்]] ஆகும். இதை மலையாளத்தில் ”கண்டம் வெச்ச கொட்டு” என்ற பெயரிலும் தயாரித்தார்.<ref>http://www.culturopedia.com/Cinema/tamil_cinema.html</ref>
 
* 1961ஆம் ஆண்டு கண்டம் வெச்ச கொட்டு என்ற மலையாளத்திரைப்படம் அம்மொழியில் எடுக்கப்பட்ட முதல் வண்ணத் திரைப்படம் ஆகும்.<ref name="chintha.com"/>
 
* 1938ஆம் ஆண்டு நோடானி இயக்கிய பாலன் என்ற திரைப்படமே முதல் மலையாள பேசும் திரைப்படமாக அமைந்தது.<ref name="chintha.com">http://www.chintha.com/keralam/malayalam-cinema-history.html</ref>
 
* மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படம் "சந்தனத்தேவன்". ஆங்கிலக் கதையான "ராபின்ஹுட்"டைத் தழுவி, இப்படம் தயாரிக்கப்பட்டது. படத்தின் கதாநாயகன் ஜி.எம். பஷீர். படம் வெற்றி பெற்றது.
 
* தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட முதல் ஆங்கிலத் திரைப்படம்: மாடர்ன் தியேட்டர்சும் அமெரிக்க திரைப்பட நிறுவனமும் இணைந்து 1952ஆம் ஆண்டில் முதல் ஆங்கிலத் திரைப்படத்தை - தி ஜங்கிள், தயாரித்தனர்.
 
* புகழ்பெற்ற நகைச்சுவை நடிகை [[மனோரமா]] கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் 1963ஆம் ஆண்டில் வெளியான [[கொஞ்சும் குமரி]] டி.ஆர். சுந்தரத்தின் 97ஆவது திரைப்படமாக அமைந்தது.
 
* மூன்று தனித்தனிக் கதைகளை கொண்ட முதல் திரைப்படம்: சௌ சௌ. மூன்று கதைகள்: கலிகால மைனர், ஸ்கூல் டிராமா மற்றும் சூரப்புலி
 
* தொலை அணுக்கவில்லை கண்டறியாத காலத்திலேயே அத்தகைய ஓர் உணர்வை உருவாக்கிய பொன்முடி பட காமெராமேனுக்கு பிரெஞ்சு அரசு விருதளித்துப் பாராட்டியது.
 
* இந்தியாவின் ஐந்து முன்னாள் முதலமைச்சர்களை தனது சம்பளப் பட்டியலில் கொண்டிருந்த தனிப்பெருமை கொண்ட நிறுவனம்.
 
* தனது திரைப்படங்களில் தரமான தயாரிப்பு அமைய அடிக்கடி வெளியிலிருந்து இயக்குனர்களை, எல்லிசு ஆர். டங்கன், மணி லால் டண்டன், பொம்மன் டி.இரானி போன்றவர்களை, பயன்படுத்தியது.
 
* கவிஞர் கண்ணதாசன் போன்றவர்கள் தொடக்க காலத்தில் இங்குதான் தங்கி பாடல்கள் எழுதிவந்தனர்.
 
==மறைவு==
1963 இல் டி.ஆர்.சுந்தரம் காலமானார். இப்போது சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் இருந்த இடம் சுந்தரம் கார்டன்ஸ் என்ற குடியிருப்புப் பகுதியாக மாறியிருக்கிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அரங்கின் நுழைவு வாயில் மட்டும் தற்போது நிலைபெற்றிருக்கிறது.இன்றைக்கும் சில படப்பிடிப்புக் குழுவினர் சேலம் மாடர்ன் தியேட்டர் வளாகத்தில் தனது முதல் படப்பிடிப்பைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2484984" இருந்து மீள்விக்கப்பட்டது