டோடோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -
சி Tweak
வரிசை 11:
|phylum=[[முதுகுநாணி]]
|classis=[[பறவை]]
|ordo=[[Columbiformesபுறா]]
|familia=[[Columbidaeபுறா]]
|subfamilia=†[[Raphinae]]
|genus=†'''''Raphus'''''
வரிசை 28:
'''டோடோ''' (''dodo'') (''Raphus cucullatus'') [[அழிந்த பறவைகள்|அழிந்த பறவையினங்களில்]] ஒன்று. பழங்காலத்தில் வாழ்ந்த பறவை இனங்களில் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன ஒரு அபூர்வப் பறவை. இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவுக்கு அருகிலுள்ள மொரீசியஸ் தீவில் தான் டோடோ என்ற இந்த அழிந்துபோன பறவை வாழ்ந்து வந்தது. டோடோ என்ற சொல்லுக்கு போர்த்துகீசிய மொழியில் முட்டாள் அல்லது அற்பமான என்பது பொருள். இது [[மொரீசியஸ்]] தீவில் வாழ்ந்த பறக்க முடியாத பறவையாகும். ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரமான டோடோ நிலத்தில் கூடு கட்டி வாழ்ந்தது; [[பழம்|பழங்களை]] [[உணவு|உணவாகக்]] கொண்டது.
 
== உடலமைப்பு ==
இப்பறவை வான்கோழியைவிட சற்றுப் பெரியது. சதைப்பற்று மிக்கது. வளைந்த பெரிய அலகு உடையது. இறகுகளும், வாலும் வளர்ச்சியுறாமல் காணப்பட்டன. கால்கள் குட்டையாகத் தடித்து மஞ்சள் நிறத்தில் இருந்தன. எனவே, இவை பறக்கவும், ஓடவும் முடியாதவைகளாக இருந்தன. ஒரு தடவைக்கு ஒரு முட்டையே இடும். தரையில் புற்களால் கூடு அமைத்து முட்டையை அடைகாக்கும்.
 
== வாழ்வு ==
இந்தப் பறவையைப் பற்றி 1507 - ஆம் ஆண்டுவரை எவரும் அறிந்திருக்கவில்லை. ஆப்பிரிக்காவைச் சுற்றி கப்பலில் சென்ற மாலுமிகள் தண்ணீரூக்காக மொரீசியஸ் தீவில் ஒதுங்கியபோது இப்பறவையைப் பார்த்தார்கள். பிடித்து உண்டார்கள். 1598 - ல் இங்கு குடியேறிய டச்சுக்காரர்கள், மனிதர்கள் விரும்பாத அழகற்ற பறவை என இதனை அறிவித்தார்கள்.
== அழிவு ==
குடியேற்றக்காரர்கள் வளர்ப்புப் பறவைகளையும், விலங்குகளையும் இறக்குமதி செய்த பிறகு இது படிப்படியாக அழியத் துவங்கியது.[[கொன்றுண்ணி]]களற்ற [[தீவு|தீவில்]] வாழ்ந்த பறவை என்பதால் டோடோ மனிதர்களைக் கண்டு அஞ்சாமை அதன் அழிவுக்கு காரணமானது. [[மொரீசியஸ்]] தீவுகளுக்கு [[போர்த்துக்கேயர்]] 1505 இல் சென்றனர். பின்னர் [[டச்சுக்காரர்கள்]] அங்கு குடியேறினர். மனிதர்களாலும் அவர்களது [[வளர்ப்பு விலங்கு]]களாலும் ஏறத்தாழ நூறாண்டுக் காலத்தில் படிப்படியாக டோடோ பறவையினம் முற்றாக அழிக்கப்பட்டது. டோடோ பறவை மெல்ல மெல்ல சூழல் பாதுகாப்புச் சின்னமாக மாறி வருகிறது. 1681 - க்குப் பிறகு இப்பறவையில் ஒன்றுகூட உயிருடன் இல்லை. அழிந்துபோன பறவையாக மாறிவிட்டது. காலத்துக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொள்ளாத மனிதர்களை மொரீசியஸ் தீவில் டோடோ என்று குறிப்பிடுகிறார்கள்.
== உசாத்துணை ==
என்புருக்கி
*[http://www.amudamtamil.com/index.php?q1=679 அமுதம் தகவல் களஞ்சியம்]
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.thinnai.com/?module=displaystory&story_id=20609152 திண்ணை மின்னிதழில் டோடோ பற்றிய கட்டுரை]
* [http://www.amudamtamil.com/index.php?q1=679 அமுதம் தகவல் களஞ்சியம்]
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
[[பகுப்பு:அழிந்த பறவைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/டோடோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது