"முடியாட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

28 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
பல நாடுகள் 20 ம் நூற்றாண்டில் முடியாட்சியை அகற்றின, குறிப்பாக [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரின்போது]] அல்லது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்போது]] குடியரசுகளாக மாறின. குடியரசுக்காக வாதிடுதலை குடியரசுக் கட்சியினர் என்று அழைப்பர், அதே நேரத்தில் முடியாட்சிக்கு ஆதரவான வாதத்தை முடியாட்சிவாதிகள் என்று அழைக்கின்றனர். நவீன சகாப்தத்தில், முடியாட்சியானது பெரிய நாடுகளைவிட சிறிய நாடுகளில் கூடுதலாக உள்ளன.<ref>{{Cite book|url=http://link.springer.com/chapter/10.1007/978-3-658-07725-9_9|title=State Size Matters|last=Veenendaal|first=Wouter|date=2016-01-01|publisher=Springer Fachmedien Wiesbaden|isbn=9783658077242|editor-last=Wolf|editor-first=Sebastian|pages=183–198|language=en|doi=10.1007/978-3-658-07725-9_9}}</ref>
== பண்புகள் ==
முடியாட்சியானது பெரும்பாலும் மரபுரிமை ஆட்சியாக உள்ளது. இந்த ஆட்சியில் மன்னர் தன் ஆயுள் முழுவதும் மன்னராக இருப்பார். (சில முடியாட்சிகளில் மன்னர்களின் வாழ்நாள் முழுவதும் ஆள்தில்லை: உதாரணமாக, மலேசியாவின் [[யாங் டி பெர்துவான் அகோங்]] ஐந்து வருட காலத்திற்கு மட்டுமே ஆள முடியும்இயலும்) மேலும் மன்னர் இறக்கும் போது அவரின் குழந்தை அல்லது அவரின் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினர் அதிகாரத்தை அடைவார். வரலாற்று காலத்திலும் நவீன நாளிலும் பெரும்பாலான பேரரசர்கள், அரச குடும்பத்தில் பிறந்து அரசவையை பார்த்து வளர்ந்தவர்களே. பெரும்பாலும் முடியாட்சியினல் எதிர்காலத்தில் மன்னராக்கூடியவர் என்று எதிர்பார்க்கப்படும் வாரீசுக்கு எதிர்கால ஆட்சிப் பொறுப்புகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
 
== முடியாட்சி முறைமையின் குறைகள் ==
ஒரு [[அரசன்|அரசனால்]] ஒரு நாட்டின் அரசு ஆளப்படுவதே முடியாட்சி அல்லது மன்னராட்சி எனப்படும். முடியாட்சியை [[மக்களாட்சி]]யுடன் ஒப்பிட்டு வேறுபாடு காணலாம். முடியாட்சி ஆட்சியமைப்பில் பல குறைகள் உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2487587" இருந்து மீள்விக்கப்பட்டது