இந்தியக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
==இந்துக் கட்டிடக்கலை==
 
[[இந்துமதம்]] பௌத்தம் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே வளர்ச்சியடைந்து வந்திருக்கின்றது எனினும், கி.பி 5 ஆம் நூற்றாண்டு வரை கட்டப்பட்டிருக்கக் கூடிய இந்துக் கட்டிடங்கள் எதுவும் அறியப் படவில்லை. பௌத்த சமயம் இந்தியாவில் வீழ்ச்சியடையத் தொடங்கிய பின்னரே இந்துக் கட்டிடக்கலையின் வேகமான வளர்ச்சி ஆரம்பித்தது எனலாம். இந்துக் கட்டிடக்கலையின் அம்சங்கள் பலவும் பௌத்த கட்டிடக்கலையிலிருந்துகட்டிடக்கலையில் உருவானவையேகாணப்பட்டவையே. நிலைத்து நிற்கக்கூடியதாகக் கட்டப்பட்ட இந்துக் கட்டிடக்கலையின் ஆரம்பகாலச் சான்றாதாரங்கள் கி. பி 5 ஆம் நூற்றாண்டிலிருந்தே கிடைக்கத் தொடங்குகின்றன. [[வட இந்தியா|வடக்கு]] மற்றும் [[மத்திய இந்தியா]]வில் [[குப்தப் பேரரசு|குப்தப் பேரரசின்]] கீழும், ஏறத்தாழ இதே காலத்தில் [[தக்காணம்|தக்காண]]த்தில் [[சாளுக்கிய அரசு|சாளுக்கிய அரசின்]] கீழும் ஏற்பட்ட இந்துமத மறுமலர்ச்சி இதற்கு வித்திட்டதெனலாம். ஆரம்பகால அமைப்புக்கள் மலைப் பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட [[குடைவரை கோயில்]]களாகவே இருந்தன. ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து இந்துக் கட்டிடக்கலை இரண்டு பிரிவுகளாக வளரத்தொடங்கியது. வடபகுதிப் பாணிக்கு [[வடஇந்தியக் கட்டிடக்கலை]]ப் பாணி என்றும், தென்னிந்தியப் பகுதிகளில் வளர்ந்த பாணிக்கு [[திராவிடக் கட்டிடக்கலை]]ப் பாணி என்றும் இன்றைய ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர். இந்துக் கட்டிடக்கலையின் இவ்விரு பிரிவுகளும் 13 ஆம் நூற்றாண்டு வரை மிக வேகமான வளர்ச்சியைக் கண்டன.
 
வடஇந்தியக் கட்டிடக்கலை பிரதேச அடிப்படையில் வேறுபாடுகளுடன் வளர்ச்சியடைந்தன. இவை முக்கியமாக ஒரிஸ்சா, மத்திய இந்தியா, ராஜபுதனம், குஜராத், தக்காணம் முதலிய பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன. தென்னிந்தியாவில், விசேடமாகத் தமிழ் நாட்டில் வளர்ந்த திராவிடக் கட்டிடக்கலையும் அரச வம்சங்களின் ஆட்சிக்கால அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. இவை பல்லவர் காலம் (கி.பி 600 - 900), சோழர் காலம் (கி.பி 900 - 1150), பாண்டியர் காலம், (கி.பி 1100 - 1350) விஜயநகரக் காலம் (கி.பி 1350 - 1565), நாயக்கர் காலம் (கி.பி 1600 - ) என அழைக்கப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/இந்தியக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது