உசுபெக்கிசுத்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 47:
| area_sq_mi = 172,742 <!--Do not remove per [[WP:MOSNUM]]-->
| percent_water = 4.9
| population_estimate = 32,979,000<ref name="Stat2016">{{cite web|url=https://www.gazeta.uz/ru/2017/01/16/population/ |title=Население Узбекистана превысило 32 млн человек|publisher=Gazeta.uz|language= Russian|accessdate=19-01-2017|date=16-01-2017}}</ref><ref>{{cite web|url=https://www.uzdaily.com/articles-id-38139.htm |script-title= Number of permanent population of Uzbekistan makes up 32.12 million people |publisher=Uzdaily.com |language= |accessdate=19-01-2017 |date=19-01-2017}}</ref>
| population_census =
| population_estimate_year = 2017
வரிசை 92:
 
தற்போதைய உசுபெக்கிசுத்தான் பண்டைய காலத்தில் [[ஈரானிய மொழிகள்|ஈரானிய]]-மொழி பேசும் [[திரான்சாக்சியானா]] பகுதியில் [[பட்டுப் பாதை]]யில் பெரும் வளத்துடன் திகழ்ந்த [[சமர்கந்து]], [[புகாரா]], கீவா ஆகிய நகரங்களைக் கொண்டிருந்தது. இப்பகுதியின் ஆரம்பகாலக் குடியேறிகள் [[சிதியர்கள்]] ஆவர். இதன் ஆரம்பகால நாகரிகங்கள் [[சிதியர்கள்|கிழக்கு ஈரானிய நாடோடிகளால்]] உருவாக்கப்பட்ட குவாரெசும் (கிமு 8ஆம்–6ஆம் நூற்றாண்டுகள்), [[பாக்திரியா]] (கிமு 8ஆம்–6ஆம் நூற்றாண்டுகள்), [[சோக்தியானா]] (8ஆம்–6ஆம் நூற்றாண்டுகள்), பெர்கானா, மார்கியானா (கிமு 3ஆம்– கிபி 6ஆம் நூற்றாண்டுகள்) ஆகியவையாகும். இப்பிராந்தியம் [[பாரசீகப் பேரரசு]]டன் இணைக்கப்பட்டு, கிபி 7ஆம் நூற்றாண்டில் [[பாரசீகம் மீதான இசுலாமியப் படையெடுப்பு|இசுலாமியப் படையெடுப்புடன்]] வீழ்ச்சியடைந்து, பெரும்பான்மையான மக்கள் [[இசுலாம்|இசுலாமியத்தைத்]] தழுவிக் கொண்டனர். 11ஆம் நூற்றாண்டில் உள்ளூரைச் சேர்ந்த குவாரசமியர் ஆட்சியின் கீழ் இருந்த இப்பகுதி, 13ஆம் நூற்றாண்டில் [[மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்பு|மங்கோலியர்களின் ஆட்சியின்]] கீழ் வந்தது. இன்றைய உசுப்பெக்கிசுத்தானின் சாரிசாப் நகரில் மங்கோலியப் பேரரசர் [[தைமூர்]] பிறந்தார். இவர் 14ஆம் நூற்றாண்டில் [[தைமூரிய வம்சம்|தைமூரிய வம்சத்தைத்]] தோற்றுவித்தார். 16ஆம் நூற்றாண்டில் இப்பகுதி உசுபெக் சாய்பானிதுகளினால் கைப்பற்றப்பட்டு, தலைநகர் [[சமர்கந்து|சமர்கந்தில்]] இருந்து [[புகாரா]]விற்கு மாற்றப்பட்டது. இப்பகுதி கீவா, கோக்கந்து, புகாரா என மூன்று [[கானேடு|மாநிலங்களாக]]ப் பிரிக்கப்பட்டன. இவை படிப்படியாக 19ஆம் நூற்றாண்டில் [[உருசியப் பேரரசு]]டன் இணைந்தன. [[தாஷ்கந்து]] உருசிய துர்க்கிசுத்தானின் முக்கிய அரசியல் மையமாகக் காணப்பட்டது. 1924 இல் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] குடியரசாக "உசுபெக் சோவியத் சோசலிசக் குடியரசு" என்ற பெயரைப் பெற்றது. 1991 இல் சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர், 1991 ஆகத்து 31 இல் உசுபெக்கிசுத்தான் குடியரசாகத் தனிநாடாக விடுதலை பெற்றது.
 
உசுபெக்கிஸ்தான் வரலாற்றுரீதியாக ஒரு மாறுபட்ட பண்பாட்டைக் கொண்டுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ மொழி [[உசுபேகிய மொழி|உசுபெக்]] ஆகும். இது [[இலத்தீன்]] எழுத்துக்களில் எழுதப்படும் [[துருக்கிய மொழிகள்|துருக்கிய மொழி]]க் குடும்பத்தைச் சேர்ந்தது. இது நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 85% மக்களால் பேசப்படுகிறது. [[உருசிய மொழி]] இங்கு பரவலாகப் பயன்படுத்தப்படும் இரண்டாவது மொழியாகும். உசுபெக்கியர்கள் மக்கள்தொகையில் 81%, உருசியர்கள் 5.4%, தாஜிக்குகள் 4.0%, கசாக்குகள் 3.0%, ஏனையோர் 6.5% ஆகும். [[முசுலிம்]]கள் 79%, [[உருசிய மரபுவழித் திருச்சபை|உருசிய மரபுவழிக் கிறித்தவர்கள்]] 5% ஆவர். ஏனைய சமயத்தோர் அல்லது சமயமறுப்பாளர்கள் 16% ஆவர். உசுபெக்குகளில் பெரும்பாலானோர் பிரிவு-சாரா முசுலிம்கள் ஆவர்.<ref>"Chapter 1: Religious Affiliation". The World’s Muslims: Unity and Diversity. Pew Research Center's Religion & Public Life Project. 9 August 2012. Retrieved 4 September 2013.</ref> உசுபெக்கிசுத்தான் [[விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம்]], [[ஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு]], [[ஐக்கிய நாடுகள் அவை|ஐக்கிய நாடுகள்]] ஆகிய உலக அமைப்புகளில் அங்கம் வகிக்கின்றது. அதிகாரபூர்வமாக இது சனநாயகக் குடியரசாக இருந்தாலும்,<ref>{{cite web|url=http://www.ksu.uz/en/page/index/id/7 |title=Constitution of the Republic of Uzbekistan |publisher=ksu.uz |accessdate=24 December 2014}}</ref> 2008 இல் [[அரசு சார்பற்ற அமைப்பு|அரச-சார்பற்ற]] [[மனித உரிமை]] இயக்கங்கள் இதனை "வரையறுக்கப்பட்ட மனித உரிமைகளைக் கொண்ட சர்வாதிகார நாடு" என வரையறுத்துள்ளன.<ref name="US State Dept - human rights">US Department of State, [https://www.state.gov/j/drl/rls/hrrpt/2008/sca/119143.htm 2008 Country Report on Human Rights Practices in Uzbekistan], Bureau of Democracy, Human Rights, and Labour, 25 February 2009</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உசுபெக்கிசுத்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது