[[படிமம்:Ares Canope Villa Adriana.jpg|thumb|250px|அட்ரியனா வில்லாவில் இருக்கும் ஏரிசுவின் சிலை]]
'''ஏரீசுஎரெசு''' என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் பன்னிரு ஒலிம்பியர்களில் ஒருவரும் போர்க் கடவுளும் ஆவார். இவர் [[சீயசுசியுசு]] மற்றும் [[ஈரா]] ஆகியோரின் மகன் ஆவார். இவருக்கு இணையான ரோமக்கடவுள் [[மார்ஸ் (தொன்மவியல்)|மார்ஸ்]] ஆவார்.
போர்க்கலையில் சிறந்தவராக ஏரீசுஎரெசு பொதுவாக அறியப்பட்டாலும், [[ஓமர்]] எழுதிய [[இலியட்]] காப்பியத்தில் ஏரீசுஎரெசு சற்று கோழையாகவே சித்தரிக்கப்படுகிறார். இவரது தமக்கையான அத்தீனா திட்டம் வகுத்து போரிடுவதால் போர்க்கலையில் சிறந்தவராகவும், ஏரீசுஎரெசு சற்றும் திட்டம் வகுக்காமல் வன்முறையில் இறங்குபவராகவும் வர்ணிக்கப்படுகிறார்கள்.
அப்ரடைட்டி மற்றும் ஏரீசுஏரெசு ஆகிய இருவரும் காதலித்தனர். ஆனால் சீயசுசியுசு அவரை எப்பெசுடசுவிற்கு கட்டாய திருமணம் செய்து வைத்தார். பிறகு எப்பெசுடசுவிடம் பாலுறவு திருப்தி கிடைக்காததால் அப்ரடைட்டி பல அழகான ஆண்களுடன் உறவாடினார். அவருக்கு ஏரிசுஎரெசு மூலம் எரோசு, அன்டெரோசு, போபோசு, டெய்மோசு, ஆர்மோனியா மற்றும் அட்ரெசுடியா ஆகியோர் பிறந்தனர்.