மேல்மரபியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 3:
'''மேல்மரபியல்''' என்பது மரபுவழிப் பண்புக்கூறுகள் [[டி. என். ஏ.|டி. என். ஏ வரிசையை]] உள்ளடக்காமல் இன்னபிற மரபணுச் (gene) செயல்பாட்டின் மூலம் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி விவரிக்கும் துறையாகும்.<ref name="Epigenetics 2009 review">{{cite journal | vauthors = Dupont C, Armant DR, Brenner CA | title = Epigenetics: definition, mechanisms and clinical perspective | journal = Seminars in Reproductive Medicine | volume = 27 | issue = 5 | pages = 351–357 | date = September 2009 | pmid = 19711245 | pmc = 2791696 | doi = 10.1055/s-0029-1237423 | quote = In the original sense of this definition, epigenetics referred to all molecular pathways modulating the expression of a genotype into a particular phenotype. Over the following years, with the rapid growth of genetics, the meaning of the word has gradually narrowed. Epigenetics has been defined and today is generally accepted as "the study of changes in gene function that are mitotically and/or meiotically heritable and that do not entail a change in DNA sequence."}}</ref> மேல்பரபியல் என்பதில் உள்ள "மேல்" என்பது [[கிரேக்கம் (மொழி)|கிரேக்க]] முன்னொட்டான "எபி-" (epi-) (ἐπι- "மேலே, வெளிப்புறத்தில், சுற்றி") என்பதிலிருந்து வருகிறது. இது "மேல்மரபியல்" என்பது வழக்கமான மரபுவழிப் பெறப்படும் பண்புகளுக்கு "மேலான" அல்லது "அதற்கும் அதிகமானவற்றைக்" குறிக்கிறது.<ref>{{cite web|title=Beware the pseudo gene genies|url=https://www.theguardian.com/science/2015/jul/19/epigenetics-dna--darwin-adam-rutherford|website=The Guardian|date=19 July 2015}}</ref> மேல்மரபியல் என்பது பெரும்பாலும் [[நிறப்புரி]]யில் (chromosome) ஏற்படும் மாற்றங்கள் எவ்வாறு மரபணுச் செயல்பாட்டிலும் மரபணு வெளிப்பாட்டிலும் (gene activity and gene expression) தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையே குறிப்பதாக இருக்கிறது. ஆனால், பல நேரங்களில் [[மரபணுத்தொகை]]யில் எந்தத் திருத்தங்களும் இல்லாமல் ஆனால் மரபுவழிப் பெறப்படும் புறத்தோற்ற மாற்றங்களை விவரிக்கவும் மேல்மரபியல் பயன்படுகிறது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு [[புரதப்பீழை]]கள் ஆகும். இது போன்ற [[உயிரணு]] விளைவுகளும் [[உடலியங்கியல்]] புறத்தோற்றப் பண்புகளும் வெளிப்புற அல்லது [[சூழல்]] சார்ந்த காரணிகளாலும் ஏற்படலாம் அல்லது அவை வழக்கமான வளர்ச்சியின் ஒரு பகுதியாகவும் இருக்கலாம். வழக்கமான மேல்மரபியல் வரையறையின் படி இது போன்ற மாற்றங்கள் மரபுவழி<ref name="nature2008"/><ref name="pmid19339683" /> உயிரணுச் சந்ததிகளின் வழியாகவோ உயிரினச் சந்ததிகளின் வழியாகவோ பெறத்தக்கவை.
 
மேல்மரபியல் எனும் சொல் ஏற்படும் மாற்றங்களையும் குறிக்கும்: அதாவது கருக்காடிக்கூறு வரிசையில் (nucleotide sequence) எந்தவித மாற்றத்தையும் உள்ளடக்காத ஆனால் குறிப்பிட்ட மரபணுத் தொகையின் செயல்பாட்டுக்குத் தொடர்புடைய மாற்றங்கள். இது போன்ற மாற்றங்களை உண்டாக்கும் செயல்முறைகளுக்கு எடுத்துக்காட்டுகள் [[டி. என். ஏ. மெத்திலேற்றம்|டி. என். ஏ. மெத்திலேற்றமும்]] [[இசுட்டோன் மாற்றம்|ஹிஸ்டோன் மாற்றமும்]] ஆகும். இந்த இரண்டு செயல்முறைகளுமே மரபணுக்கள் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றன என்பதை அடிப்படை டி. என். ஏ. வரிசையை மாற்றாமல் நிகழ்த்துகின்றன. மரபணு வெளிப்பாடு ஆனது டி. என். ஏ.விலுள்ள அமைதியாக்கு பகுதிகளில் (silencer) ஒட்டிக்கொள்ளும் ஒடுக்குப் புரதங்களின் (repressor protein) செயல்பாட்டினால் கட்டுப்படுத்தப்படலாம். இந்த மேல்மரபியல் மாற்றங்கள் உயிரணுப் பிளவு நிகழும் வரை அப்படியே இருக்கலாம். மேலும் ஓர் உயிரினத்தின் அடிப்படை டி. என். ஏ. வரிசையில் எந்த மாற்றமும் ஏற்படுத்தாமல் பல தலைமுறைகளுக்கும் கடத்தப்படலாம்;<ref name="pmid17522671">{{cite journal | vauthors=Bird A | title=Perceptions of epigenetics | journal=[[Nature (journal)|Nature]] | volume=447 | issue=7143 | pages=396–8 | date=May 2007 | pmid=17522671 | doi=10.1038/nature05913 | bibcode=2007Natur.447..396B }}</ref> அதாவது, மரபற்ற காரணிகள் (non-genetic factors) ஓர் உயிரினத்தின் மரபணுக்கள் எவ்வாறு மாறிச் செயல்புரிய வேண்டும் (அல்லது "தங்களை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும்) என்பதற்குக் காரணமாக அமைகின்றன.<ref>{{cite web|url=http://www.prospect-magazine.co.uk/article_details.php?id=10140 |title=What genes remember |author=Hunter, Philip |magazine=Prospect Magazine |issue=146 |publisher=Web.archive.org |date=1 May 2008 |accessdate=26 July 2012 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20080501094940/http://www.prospect-magazine.co.uk/article_details.php?id=10140 |archivedate=1 May 2008 }}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மேல்மரபியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது