"விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா 16 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

:ஆம், கூடல் நடைபெறும் இரு நாட்கள், ஆக அதிகம் அதற்கு முன்பு ஒரு நாள் யாழ்ப்பாணத்தில் தங்குவது மற்றும் உணவுக்கான செலவை நல்கை வழங்கலாம். அதற்குக் கூடுதலான நாட்கள் தங்க விரும்புவோர் போக்குவரத்து, உணவு, தங்குமிடத்துக்குத் தாங்களே பொறுப்பேற்க வேண்டும். பல்கலையில் தான் தங்கும் இடம் வேண்டும் என்று கட்டாயம் இல்லை. அதற்கு பல்கலை பொறுப்பாளர்களிடம் அனுமதி வாங்குவதும் இழுபறியான வேலையாக இருக்கக் கூடும். பொதுவாக, விக்கிமேனியா, விக்கிமீடியா மாநாடு போன்றவற்றுக்கு நான்கு நட்சத்திர விடுதிகளில் இடம் ஏற்பாடு செய்கிறார்கள். அதிகபட்சமாக, அத்தகைய வசதியைக் கோரலாம். நிகழ்வினை எங்கு நடத்தத் திட்டமிட்டு உள்ளீர்கள்? தங்குமிடம், நிகழ்வு நடத்தும் அரங்கும் ஆகியவை ஒருங்கே அமைந்த விடுதி இருந்தால் அங்கு நடத்துவது பல்வேறு நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்க உதவும். யாழ்ப்பாணத்தில் உள்ள வசதிகள், செலவை முன்வைத்து நீங்கள் முடிவெடுக்கலாம். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]])
{{விருப்பம்}}--[[பயனர்:Nandhinikandhasamy|நந்தினிகந்தசாமி]] ([[பயனர் பேச்சு:Nandhinikandhasamy|பேச்சு]]) 11:29, 26 பெப்ரவரி 2018 (UTC)
 
:வணக்கம், பள்ளிக்கல்வியில் முனைப்புக்காட்டி வருவதினால் பல நாட்கள் விக்கிக்கு வர முடியவில்லை. யாழ்ப்பாணத்தில் கொண்டாட்ட்டம் இடம்பெறுவது மகிழ்ச்சி, என்னாலான உதவிகளை செய்ய முடியும். சிவகோசரன் அவர்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 04:20, 1 மார்ச் 2018 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2492447" இருந்து மீள்விக்கப்பட்டது