இலியட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
 
== கதை சுருக்கம் ==
ஸ்பார்ட்டாவின் அரசனான மெநிலாஸின் மனைவியான ஹெலனை [[திராய்]] நாட்டு இளவரசனான பாரிஸ் கவர்ந்து கொண்டு தனது நாட்டிற்கு வந்துவிடுகிறான். இதனால் மெனிலாஸ் தன சகோதரனும் மைசினியாவின் அரசனான அகமேனானின் உதவியை நாடுகிறான். இவர்களின் தலைமையில் கிரேக்கர்களின் பெரும் படை ட்ராய் நகரத்தை முற்றுகையிடுகிறது. அந்நகரம் பெரிய மதில்களால் சூழப்பட்ட நகரம். எனவே, முற்றுகை ஆண்டுகணக்கில் நீடிக்கிறது. போரின் போது சைரிசஸ் என்ற அப்போலோஅப்பல்லோ கடவுளின் பூசாரி சிறை பிடிக்கப்பட்ட தனது மகளான சைரிசசிஸை ஒப்படைத்தால் கிரேக்கர்களுக்கு எராளமான செல்வத்தை தருவதாக கூறுகிறார். எனினும், அகமனான் அதை மறுப்பதால் அவர் அப்பல்லோ கடவுளிடம் முறையிடுகிறார். இதன் காரணமாக, கிரேக்க இராணுவம் முழுவதிலும் பிளேக் நோயை ஏற்படுகிறது.
 
:பிளேக் பரவி ஒன்பது நாட்களுக்கு பிறகு கிரேக்க மாவீரனான ஆக்கிலீஸின் அழுத்தத்தின் பேரில் அகமனானின் சைரிசசிஸை அவரது தந்தை திரும்ப ஒப்புக்கொள்கிறார். ஆனால், இழப்பீடாக ஆக்கிலீஸின் வசமிருந்த ப்ரிசைஸ் என்ற பெண்ணை சிறைபிடித்து கொள்கிறார். இதனால் கோபமடைந்த அக்கிலீஸ் தான் மற்றும் தனது ஆட்கள் இனி அகமனானுக்காக போராடுவதில்லை என கூறிவிட்டு வெளியேறுகிறார். அத்துடன் பிளேக் நீங்குகிறது.
வரிசை 16:
 
அச்சமயத்தில், ஆக்கிலியசின் உறவினனான பெட்ராகிளஸ் கப்பல்களைப் பாதுகாக்க ஆக்கிலீஸின் மந்திர சக்தி வாய்ந்த கவசத்தைப் பூட்டிக் கொண்டு, அவனைப் போல வேடமணிந்து போருக்குச் செல்கிறான். பெட்ராகிளஸ் போரில் ஆக்கிலியசின் படைவீரர்களுடன் போருக்கு செல்கிறான். அவர் டிராஜன்கள் திடீர் தாக்குதலை முறியடிகிறார். மேலும், ட்ரோஜன் செர்போடோனை கொள்கிறான். இறுதியாக, அவன் ஹெக்டரால் கொல்லப்பட்டான்.
 
அதன் பின்னர் ஹெக்டர் இறந்த பெட்ராகிளஸிடமிருந்து ஆக்கிலீஸின் கவசத்தை எடுத்துக்கொள்கிறான். போர் அவனது உடலைச் சுற்றித் தொடர்ந்து நடைபெறுகிறது. பெட்ராகிளஸ் மரணத்தை அறிந்து கேட்டு ஆக்கிலீஸ் வருத்ததில் ஹெக்டர் பழிவாங்குவதாக சபதம் எடுத்துகொள்கிறான். ஹெக்டரை அவன் கொல்ல நேர்ந்தால், விதிப்படி ஆக்கிலீஸ் இளம்வயதில் இறப்பான் என்று அவன் தாயார் டீடிஸ் தடுக்க முயற்சிக்கிறாள். எனினும், அதை ஏற்க மறுக்கிறான். அதன் பின்னர், அவர் ஹெக்டோருடன் கடும்போரிட்டு அவனைக் கொல்கிறான். அவன் உடலைத் தனது ரதத்தில் கட்டி இழுத்து வருகிறான்.
 
அதன் பின்னர், பெட்ராகிளஸின் ஆவி அவன் கனவில் வந்து தனது உடலை எரிக்குமாறு வலியுறுத்தியது. அதன் பின்னர், அவன் உடல் எரிக்கப்பட்டது. இரவில் யாருக்கும் தெரியாமல் பிரியம் மன்னர் அக்கீலியசிடம் வந்து தனது மகனது உடலைத் தருமாறு கெஞ்சி வாங்கிக் கொண்டு சென்று அவன் உடலுக்கு எரியூட்டுகிறான்.
 
"https://ta.wikipedia.org/wiki/இலியட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது