சமிபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 61:
[[Image:Digestive hormones.jpg|right|thumb|350px|முதன்மையான சமிபாட்டு இயக்குநீர்களின் செயல்முறை]]
சமிபாட்டில் உதவும் இயக்குநீர்களின் தொழிற்பாடு வெவ்வேறுவகை முதுகெலும்பிகளில் வேறுபட்டுக் காணப்படும்.
[[பாலூட்டி]]களில் சமிபாட்டிற்கு உதவவும், அதனை ஒழுங்குபடுத்தவும் பல [[இயக்குநீர்]]கள் காணப்படுகின்றன.<ref>Nelson RJ. 2005. Introduction to Behavioral Endocrinology. Sinauer Associates: Massachusetts. p 57.</ref><ref name=" GDS">{{cite web | url=http://gastrodigestivesystem.com/digestion/digestive-hormones | title=Digestive Hormones | publisher=GDS | accessdate=7 மார்ச் 2018}}</ref>
*[[காசுட்ரின்]] (gastrin) - இது இரைப்பையில் சுரக்கப்படும் இயக்குநீராகும். இது இரைப்பைச் சுரப்பிகளைத் தூண்டி, பெப்சினோசன் என்னும் ஒரு நொதிய முன்னோடியையும் [[ஐதரோகுளோரிக் காடி]]யையும் சுரக்கச் செய்கிறது. பெப்சினோசனின் இயக்கநிலை நொதியம் பெப்சின் ஆகும். இரைப்பையைச் சென்றடையும் உணவே காசுட்ரினைச் சுரக்கச் செய்கிறது. குறைந்த [[காரகாடித்தன்மைச் சுட்டெண்|காரகாடித்தன்மை]] இருக்கையில் இதன் சுரப்பு நிறுத்தப்படும்.
*[[செக்ரிட்டின்]] (secretin) - இது முன்சிறுகுடலில் இருக்கும் [[உயிரணு]]க்களால் சுரக்கப்படும் இயக்குநீராகும். இது [[கணையம்|கணையத்தில்]] சோடியம் இரு கார்பனேற்றுச் சுரப்பிற்கான சைகையை வழங்குவதுடன், [[கல்லீரல்|கல்லீரலில்]] [[பித்தநீர்]]ச் சுரப்பையும் தூண்டுகிறது. இதன் தொழிற்பாடு இரைப்பைப்பாகு அல்லது உணவுச் செரிகலவையின் (chyme) காடித்தன்மையில் தங்கியிருக்கும். சோடியம் இரு கார்பனேற்று இரைப்பையிலிருந்து வரும் இரைப்பைப்பாகைன் காடித்தன்மையைச் நடுநிலையாக்க உதவும்.
"https://ta.wikipedia.org/wiki/சமிபாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது