"மம்மி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,714 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
==எகிப்திய மம்மிக்கள்==
ஆரம்பகால, கி.மு. 3500 க்கும் முற்பட்ட எகிப்திய மம்மிகள் அவை புதைக்கப்பட்ட சுற்றுச்சூழலின் காரணமாக இயற்கையாக மம்மிக்களாக உருவாகின. பண்டைய எகிப்தில் [[சமூகத் தகுதிநிலை]] அறிந்து புதைக்கும் வழக்கங்கள் இல்லை. இறந்தவர்களின் உடல்கள் சாதாரண மண் குழிகள் புதைக்கப்படும். சூடான, வறண்ட பாலைவன மண்ணானது இயற்கையாக இறந்தவர்களின் உடல்களில் இருந்த நீரை ஆவியாக்கி மம்மிக்களாக உருவாக்கிவிடும்.
இயற்கையாக சடலங்கள் பதப்படுத்தப்பட்டது போல் ஆனது எகிப்திய கலாச்சாரத்திலும், மதத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எகிப்தின் இரண்டாவது வம்சக் காலகட்டத்தில் (கி.மு 2800 காலக்கட்டம்) இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்துதல் என்பது இறந்தோருக்கு செய்யப்படும் சடங்குளில் ஒன்றானது. இறந்ததற்கு பிறகான வாழ்க்கையை வாழ உடலைப் பதப்படுத்துதல் முக்கியம் என அவர்கள் கருதத் தொடங்கினார்கள். எகிப்தியர்களின் செல்வம் பெருக பெருக இறந்தப்பிறகு செய்யப்படும் சடங்கானது [[சமூகத் தகுதிநிலை|சமூகத் தகுதிநிலையை]] உணர்த்துவதாகக் கருதப்பட்டது. இதன்காரணமாக பெரும் பெரும் கல்லரைகள் கட்டும் பழக்கங்களும், அதிநவீன பதப்படுத்தும் முறைகளும் நடைமுறைக்கு வந்தன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2497547" இருந்து மீள்விக்கப்பட்டது