செம்மீன் (புதினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கதைச் சுருக்கம்
வரிசை 7:
 
இந்திய இலக்கியத்தின் இரண்டாவது பெரிய விருதாகக் கருதப்படும் [[சாகித்திய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர்கள்|சாகித்திய அகாதமி விருது]] விருதினை செம்மீன் புதினம் 1957 இல் பெற்றது.
 
== கதைச் சுருக்கம் ==
செம்பன்குஞ்சு என்பவர் ஒரு மீனவர். அவருக்கு சொந்தமாக ஒரு [[படகு|படகையும்]] ,வலையையும் வாங்க வேண்டும் என்பதையே வாழ்க்கையின் ஒரே நோக்கமாகக் கொண்டுள்ளார். இதனை ஒரு முஸ்லீம் மீன் மொத்தவியாபாரியின் மகனான பரீக்குட்டியின் உதவியுடன் இதனை நிறைவேற்றுகிறார். ஆனால் பரீக்குட்டி ஒரு நிபந்தனை விதிக்கிறார். அது அவருக்கு கிடைக்கும் மீன்கள் அனைத்தையும் தன்னிடமே விற்க வேண்டும் என்பதாகும். செம்பன்குஞ்சுவிற்கு அழகான ஒரு மகள் இருக்கிறார். அவருடைய பெயர் கருத்தம்மா. கருத்தம்மாவிற்கும் பரீக்குட்டிக்கும் இடையே காதல் மலருகிறது. இதனைத் தெரிந்துகொண்ட கருத்தம்மாவின் தாய் சக்கி, அவருடைய சமுதாயக் கட்டுப்பாடுகளுக்கு எதிரானது என எச்சரிக்கை செய்கிறார். கருத்தம்மா , பரீக்குட்டிக்காக தனது காதலை தியாகம் செய்கிறார். பின் பழனி என்ற ஆதரவற்றோரை திருமணம் செய்கிறார். பின் கனவருடன் அவ்ருடைய [[ஊர்|ஊருக்குச்]] செல்கிறார். சென்பன்குஞ்சு மற்றுமொரு படகு, வலையை வாங்குகிறான். அதன்மூலம் பேராசைக்காரனாகவும், இதயமற்றவனாகவும் ஆகின்றான். பரீக்குட்டியிடம் வாங்கிய கடனையும் திருப்பிச் செலுத்த மறுக்கிறான். சக்கி இறந்த பிறகு பாப்பிகுஞ்சு என்ற பெண்ணை மறுமணம் செய்கிறார் செம்பன்குஞ்சு. தனது தந்தை மறுமணம் செய்ததை அறிந்து தனது சகோதரி பஞ்சமியின் வீட்டிற்குச் செல்கிறார் கருத்தம்மா. அதேசமயம் கருத்தம்மா ஒரு நல்ல மனைவியாகவும், தாயாகவும் நடந்துகொள்கிறார். ஆனால் பரீக்குட்டியுடன் இருந்த காதலை அந்த ஊர் மக்கள் பழனியிடம் தவறாக எடுத்துக் கூறுகின்றனர். பழனியின் நன்பர்கள் இதனைக் காரனம் காட்டி அவரைத் தங்களுடன் மீன்பிடிக்க அழைத்துச்செல்வதில் இருந்து விலக்கி வைக்கின்றனர். பின் ஒருநாள் இரவில் பரீக்குட்டியும் கருத்தம்மாவும் சந்திக்கின்றனர். அந்தச் சந்திப்பின் போது அவர்களின் பழைய காதல்மீன்டும் துளிர்க்கிறது. பழனியின் வலையில் ஒரு பெரிய சுறா சிக்குகிறது அப்போது ஒரு பெரிய நீர்ச்சுழி அவனை விழுங்குகிறது. அடுத்த நாள் காலையில் கடற்கரை ஓரத்தில் கருத்தம்மாவும் பழனியும் கைகோர்த்தபடி இறந்து கிடக்கின்றனர்.
 
==திரைப்படம்==
"https://ta.wikipedia.org/wiki/செம்மீன்_(புதினம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது