பண்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 45:
 
=== ஆபிரகாமிய சமயங்கள் ===
[[யூதாயிசம்]] அறியப்பட்ட [[ஓரிறைக் கொள்கை]] உடைய முதற் சமயங்களுள் ஒன்றும், இன்றும் கடைப்பிடிக்கப்படுகின்ற சமயங்களுள் மிகப் பழையனவற்றுள் ஒன்றுமாகும். யூதர்களின் விழுமியங்களும், வரலாறும் கிறிஸ்தவம், [[இஸ்லாம்]], [[பஹாய்]] போன்ற பிற ஆபிரகாமிய சமயங்களின் அடிப்படைகளின் பெரும் பங்காக உள்ளன. இவை, ஆபிரகாமின் மரபுவழியைப் பொதுவாகக் கொண்டிருந்தபோதும், ஒவ்வொன்றும் அவற்றுக்கே தனித்துவமான கலைகளையும் கொண்டுள்ளன. உண்மையில் இவற்றுட் சில அச் சமயங்கள் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலப்பகுதிகளின் செல்வாக்கினால் உண்டானதாக இருந்தாலும், சமயங்களால் வலியுறுத்தப்படும் பண்பாட்டு வெளிப்பாடுகளும் இருகின்றன.
 
ஐரோப்பா, புதிய உலகம் ஆகியவற்றின் பண்பாடுகளைப் பொறுத்தவரை கடந்த 500 தொடக்கம் 1500 ஆண்டுகளாகக் கிறிஸ்தவம் முக்கியமான பங்கை வகித்துவருகிறது. தற்கால மெய்யியல் சிந்தனைகளில், சென். [[தாமஸ் அக்குவைனஸ்]], [[எராஸ்மஸ்]] போன்ற கிறிஸ்தவச் சிந்தனையாளர்களின் செல்வாக்குப் பெருமளவு உள்ளது. தவிர, கிறிஸ்தவப் பேராலயங்களான [[நோட்ரே டேம் டி பாரிஸ்]], [[வெல்ஸ் பேராலயம்]], [[மெக்சிக்கோ நகர மெட்ரோபோலிட்டன் பேராலயம்]] போன்றவை கட்டிடக்கலை முக்கியத்துவம் கொண்டவை.
"https://ta.wikipedia.org/wiki/பண்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது