ஞானபீட விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரை விரிவாக்கம்
கட்டுரை விரிவாக்கம்
வரிசை 7:
[[1982]] வரை, ஓர் எழுத்தாளரின் குறிப்பிட்ட படைப்பை பாராட்டி, ஞான பீட விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஓர் எழுத்தாளரின் வாழ்நாளில் அவர் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, அதிகப்பட்சமாக, [[கன்னடம்|கன்னட மொழி]] எழுத்தாளர்கள் 7 முறையும் [[இந்தி|இந்தி மொழி]] எழுத்தாளர்கள் 6 முறையும் இந்த விருதைப் பெற்றுள்ளார்கள்.
 
2015 ஆம் ஆண்டில் பரிசுத் தொகையானது இந்திய மதிப்பில் 11 இலட்சமாக உயர்த்தப்பட்டது. மொத்தமுள்ள தகுதியான இருபத்தைந்து மொழிகளில் இதுவரை மொத்தம் பதினைந்து மொழிகளில் விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது. [[இந்தி]] மொழிகளில் இதுவரை பதினொரு விருதுகளும், [[கன்னடம்]] மொழிகளில் எட்டு விருதுகளும், [[வங்காள மொழி|வங்காள மொழியில்]] இதுவரை 6 விருதுகளும், [[மலையாளம்|மலையாளத்தில்]] 6 விருதுகளும், [[குஜராத்தி]] , [[மராத்திய மொழி]], [[ஒடியா மொழி]], [[உருது]] போன்ற மொழிகளில் தலா நான்கு விருதுகளும், [[தெலுங்கு]] மூன்று விருதுகளும், [[அசாமிய மொழி]], [[பஞ்சாபிய மொழி]], மற்றும் [[தமிழ்]] போன்ற மொழிகளில் இரண்டு விருதுகளும், காஷ்மீரி, கொங்கனி, [[சமஸ்கிருதம்]] ஆகிய மொழிகளில் ஒரு முறையும் விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுவரையில் ஐம்பத்தி ஏழு நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் ஏழு நபர்கள் பெண்கள் ஆவர். ஆஷா பூர்ணாதேவி இந்த விருதைப் பெற்ற முதல் பெண் எழுத்தாளர் ஆவார். 1965 ஆம் ஆண்டில் முதல்சத்தியம் எனும் வங்காள புதினத்திற்காக இவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது.
 
பிண்ணனி
 
பாரதிய ஞானபீட ஆய்வு மற்றும் வரலாற்று நிறுவனம் எனும் நிறுவனத்தை 1944 இல் சகு சாந்தி பிரசாத் ஜெயின் என்ற சகு ஜெயின் குடும்பத்தைச் சேர்ந்தவரால் தோற்றுவிக்கப்பட்டது. மே 1961 இல் இந்திய மொழிகளின் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து சிறந்த நூலிற்கான விருது வழங்க வேண்டும் என நினைத்தனர். பின் நவம்பர் மாத இறுதியில் ரமா ஜெயின் , (பாரதிய ஞானபீடத்தைத் தோற்றுவித்தவர் ) சில இலக்கிய வல்லுநர்களை அழைத்து இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டார். அவர்களில் சிலர் காகா காலேல்கர், ஹரிவன்சராய் பச்சன், ராம்தாரி சிங் திங்கர், ஜெய்னெந்திர குமார், ஜெகதீசு சந்திர மார்தூர், பிரபாகர் மாசே, அக்சய குமார் ஜெயின் மற்றும் லட்சுமி சந்திரா ஜெயின். மேலும் இது பற்றி 1962 இல் அனைத்திந்திய குஜராத்திம் சாகித்திய பரிசத் மற்றும் பாரதிய பாஷா பரிசத்தின் ஆண்டுக் அமர்வில் விவாதிக்கப்பட்டது.
 
ஏப்ரல் 2, 1962 இல் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து சுமார் 300 எழுத்தளர்களை புதுதில்லிக்கு அழைத்து அவர்களை இரு அமர்வுகளாக தரம்வீர் பாரதி அவர்கள் பரிசோதித்து பின் அந்த முன்வரைவினை பிரசாத்திடம் வழங்கினார். முதல் தேர்வுக்குழுக் கூட்டமானது மார்ச் 16, 1963இல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் பிரசாத் அவர்கள் பெப்ரவரி 28, 1963 இல் இறந்தார். எனவே காகா காலேல்கர் மற்றும் சம்பூர்ணா நந்தர் ஆகியேரை தற்காலிக நிறுவனர்களாக குழி நிர்ணயம் செய்தது.
 
முதல் தேர்வுக்குழு உறுப்பினர்களாக நிரஞ்சன் ராய், கரண் சிங், ஆர். ஆர். திவாகர், வி.ராகவன், பி. கோபால் ரெட்டி, ஹரேகிருஷ்ணா மஹாதப், ரமா ஜெயின், மற்றும் லட்சுமி சந்திரா ஜெயின் ஆகியோர் இருந்தனர். சம்பூர்ணா நந்தர் தலைவராக செயல்பட்டார். 1921 முதல் 1951 ஆம் ஆண்டுகள் வரையிலான காலங்களில் எழுதப்பட்ட நூல்களை முதல் விருதுக்கான பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டனர்.
 
விதிமுறைகள், தேர்வு செய்யும் நடைமுறைகள்
 
விருதிற்காக பல இலக்கிய வல்லுநர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழகங்கள், பல மொழிகளைச் சேர்ந்த சங்கங்கள், விமர்சகர்கள். போன்றவர்களிடமிருந்து  பரிந்துரைகள் பெறப்படுகின்றன. தற்சமயம் விருது பெற்ற ஒருவரின் நூல்களை அடுத்த இரண்டு வருடத்திற்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
 
== ஞான பீட விருது பெற்றோர் பட்டியல் ==
"https://ta.wikipedia.org/wiki/ஞானபீட_விருது" இலிருந்து மீள்விக்கப்பட்டது