வளி மாசடைதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 25:
*கார்பன் மோனாக்சைடு: CO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட இவ்வாயு நிறமற்றது மற்றும் நெடியற்றது ஆகும். நச்சுத்தன்மை கொண்ட இவ்வாயு எரிச்சலூட்டாது. இயற்கை எரிவாயு, நிலக்கரி அல்லது மர எரிபொருள்கள் எரியும் போது இவ்வாயு உற்பத்தியாகிறது. 80% மோட்டார் வாகனங்கள் எரிபொருளை அரைகுறையாக எரித்து வெளியிடும் புகையில் இவ்வாயு காற்றில் கலந்து அதை மாசுபடுத்துகிறது <ref>“Vehicles, Air Pollution, and Human Health.” Union of Concerned Scientists, www.ucsusa.org/clean-vehicles/vehicles-air-pollution-and-human-health</ref>. ஏனைய 20% கார்பன் மோனாக்சைடு சுரங்கங்கள், தொழிற்சாலைகளில் உருவாகின்றன. கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த இவ்வாயுவை சுவாசித்தால் தலைவலி, கண்பார்வை பாதிப்பு, பக்கவாதம், செயலின்மை போன்ற நோய்கள் தோன்றுகின்றன. இவ்வாயுவும் ஆக்சிசனைப் போலவே நுரையீரலுக்குள் உறிஞ்சப்படுகிறது. இதனால் சுவாசம் பாதிக்கப்பட்டு மரணமே கூட நிகழலாம்.
*ஆவியாகும் கரிம சேர்மங்கள்: நன்கு அறியப்பட்ட எளிதில் ஆவியாகும் கரிமச் சேர்மங்களும் காற்றை மாசுபடுத்துகின்றன. மீத்தேன் அல்லது மீத்தேன் அல்லாத வாயுக்கள் இம்மாசுபாட்டிற்கு முக்கியமான காரணியாக உள்ளன. காற்றை மாசுபடுத்தும் பசுமையக வாயுக்களில் மீத்தேன் மிக முக்கியமானது ஆகும். இதர ஐதரோகார்பன்களும் காற்றை மாசுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன, அரோமாட்டிக் ஐதரோகார்பன்கள் புற்று நோயை உருவாக்குகின்றன. பென்சோபைரீன் என்ற ஐதரோகார்பன் சிகரெட் புகையில் உள்ளது. இது நுரையீரல் புற்று நோயை உண்டாக்குகிறது. 1,3 பியூட்டா டையீன் என்ற ஐதரோகார்பன் மற்றொரு அபாயகரமான கரிமச் சேர்மமாகும்.
*ஐதரசன் புளோரைடு: HF என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு வாயுவாகும். அலுமினியம் மற்றும் வேதிப்பொருட்கள் தயாரிக்கும் தொழிசாலைகளில் இருந்து பெருமளவில் இவ்வாயு வெளியிடப்படுகிறது. இவ்வாயு கலந்த காற்று சுவாசிக்கப்பட்டால் மூச்சுக்குழல் பாதிக்கப்படுவதோடு எலும்பு, பற்களும் பாதிக்கப்படுகின்றன. மேலும் இவ்வாயு தாவரங்களையும் பாதிக்கிறது.
*ஐதரசன் சல்பைடு: H2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட இவ்வாயுவை பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்கள் பெருமளவில் வெளியிடுகின்றன. சுவாச நோய், பக்கவாதம் போன்ற நோய்களுக்கு இவ்வாயு காரணமாகிறது. சாயங்களை அரிக்கும் தன்மையும் கொண்டுள்ளது.
காற்று மாசுபடுதலைக் கட்டுபடுத்தும் வழிகள்:
# எரிபொருட்களை தேவையான அளவு காற்றுடன் கலந்து எரிப்பதன் மூலம் தடுக்க முடியும்.
# எரிபொருட்களை உயர்ந்த வெப்பநிலையில் எரிக்க வேண்டும்
# எரிபொருட்களை சீராக தொடர்ந்து நிரப்புதல் மூலமாகவும் புகை உண்டாவதை தடுக்க முடியும்.
# தூசு நீக்கும் அறை, கழிவறை, படியவைக்கும் அறை போன்றவற்றை பயன்படுத்துவதால் தூசு உருவாதலை தடுக்க இயலும்.
# சில வேதிவினைகளைக் கொண்டும் காற்று மாசுபடுதலை குறைக்கலாம்.
== மேற்கோள்கள் ==
{{reflist}}
|