உய்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''உய்யா''' (Huia) ({{IPA-mi|ˈhʉiˌa|lang}}; ''ஹெட்டராலோச்சா அக்குட்டிரொசுட்ரிசு'') என்பது, நியூசிலாந்தின் வடக்குத் தீவுக்கு உரிய அழிந்துபோன ஒரு பறவை. உறுதிப்படுத்திய வகையில் கடைசியாக இப்பறைவையைப் பார்த்தது 1907 ஆம் ஆண்டில் ஆகும். ஆனால், 1960கள் வரை இப்பறவையைப் பார்த்ததற்கு நம்பத்தக்க சான்றுகள் உள்ளன. இதன் அழிவுக்கு முதன்மையான இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, மாதிரிகளை உருவாக்குவதற்கான உய்யாத் தோலுக்காகவும், தொப்பி அலங்காரத்துக்கான வால் இறகுகளுக்காகவும், இவை அளவு மீறி வேட்டையாடப்பட்டது. இரண்டாவது, வேளாண்மைக்காக ஐரோப்பியக் குடியேறிகளால் வட தீவுகளின் தாழ் நிலங்களில் இடம்பெற்ற காடளிப்பு. பெரும்பாலான காடுகள் மிகப் பழமையான, சூழலியல் அடிப்படையில் சிக்கலான, முதன்மைக் காடுகள். முன்னர் அவற்றில் வாழ்ந்த உய்யாக்கள் மீட்டுருவாக்கப்பட்ட இரண்டாம்நிலைக் காடுகளில் வாழ முடியவில்லை.
 
ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்பே ஒரு அரிதான பறவையாக இருந்த இது, ருகைன், தராவுரா, ரிமுத்தாக்கா, வடக்குத் தீவின் தென்கிழக்கில் உள்ள கைமனாவா மலைத்தொடர் ஆகிய பகுதிகளில் மட்டுமே காணப்பட்டன. உலகின் எந்தப் பறவை இனத்திலும் பார்க்க அலகின் வடிவத்தில் மிகத் தெளிவான பால்வேறுபாடு காணப்படுவது குறிப்பிடத்தக்கது. பெண் பறவையின் அலகு நீண்டு, மெலிந்து, கீழ்நோக்கி வளைந்து காணப்படும். ஆண் பறவையின் அலகு குட்டையாகவும், தடித்தும் காகத்தின் அலகுபோல் காணப்படும். ஆண் பறவைகள், 45 சமீ (18 அங்குலம்) நீளம்கொண்டவை. பெண் பறவைகள் 48 சமீ (19 அங்குலம்) நீளமானது. இவை தவிர, செம்மஞ்சள் தாடையும், பச்சை மினுக்கத்துடன் கூடிய கருநிறச் சிறகுகளுடனும் இரண்டு பாலினங்களும் ஒத்த தோற்றம் கொண்டவை. வால் இறகுகள் நுனிப் பகுதியில் வெண்ணிறப் பட்டையுடன் தனித்துவமாகக் காணப்படும்.
 
[[பகுப்பு: அழிந்துபோன பறவைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/உய்யா" இலிருந்து மீள்விக்கப்பட்டது