கொண்டைக்கிளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
விதைகள், கிழங்குகள், பழங்கள், பூக்கள், பூச்சிகள் போன்றவற்றைக் கொக்கட்டூக்கள் விரும்பி உண்கின்றன. இவை பெரும்பாலும், குறிப்பாக நிலத்தில் உண்ணும்போது கூட்டமாக வந்து உண்கின்றன. கொக்கட்டூக்கள் ஒருதுணை கொள்பவை. இவை மரப் பொந்துகளில் கூடுகளை அமைக்கின்றன. சில கொக்கட்டூ இனங்கள் வாழிட இழப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெரிய, முதிர்ந்த மரங்கள் பெருமளவில் வெட்டப்படுவதால், கூடமைப்பதற்கு உகந்த மரப் பொந்துகள் கிடைப்பது அரிதாகிறது. அதேவேளை, சில இனங்கள் மனித மாற்றங்களுக்கு ஏற்ப இசைவாக்கம் பெற்றுள்ளதுடன், வேளாண்மை தொடர்பில் பாதிப்பை விளைவிக்கும் உயிரினங்களாகவும் கருதப்படுகின்றன.
 
பறவை வளர்ப்பில் கொக்கட்டூக்கள் பெரிதும் விரும்பப்படும் பறவைகளாக உள்ளன. ஆனால், அவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்வது கடினமானது. கொக்கட்டூக்களில், பராமரிப்பதற்கு இலகுவானது கொக்கட்டியல் என்ற இனமாகும். இதனால், இவையே பெரும்பாலும் கூட்டில் அடைத்து வளர்க்கப்படுகின்றன. கூட்டில் வளர்க்கும் கொக்கட்டூக்களில் கறுப்பைவிட வெள்ளை நிறம் கொண்டவையே கூடுதலாகக் காணப்படுகின்றன. சட்டத்துக்கு மாறாகக் காட்டில் பிடிக்கப்படும் கொக்கடூக்களின் வணிகத்தால், காட்டில் வாழும் கொக்கட்டூ இனங்கள் சில அருகி வருகின்றன.
 
== பெயர் ==
17 ஆம் நூற்றாண்டில் இருந்து வழங்கிவரும் "கொக்கட்டூ" என்னும் பெயர், இப்பறவைகளைக் குறிக்கும் மலே மொழிச் சொல்லான "கக்கக் டுவா" (மூத்த உடன்பிறப்பு) என்பதில் இருந்து உருவானது. அல்லது வெள்ளைக் கொக்கட்டூக்கள் எழுப்பும் ஒலியில் இருந்தும் உருவாகி இருக்கலாம். 17 ஆம் நூற்றாண்டில் இவை, கக்கட்டோ, கொக்கட்டூன், குறொக்கடோர் ஆகிய பெயர்களாலும் குறிப்பிடப்பட்டன. கொக்கட்டோ, கொக்கட்டோர் ஆகிய பெயர்களும் 18 ஆம் நூற்றாண்டில் வழக்கில் இருந்தன. இவற்றில் இருந்து பெறப்பட்ட சொற்களான ''கக்கட்டுயிடே'', ''கக்கட்டுவா'' என்பன முறையே இவை சார்ந்த இனத்துக்கும், பேரினத்துக்கும் வழங்கப்பட்டுள்ளன.
 
[[பகுப்பு:பறவைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கொண்டைக்கிளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது