"போலந்துக் கொடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,744 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
கிடையாக வெள்ளை, சிவப்பு நிறங்களைக் கொண்ட வடிவமைப்பு ஒப்பீட்டளவில் பரவலாகக் காணப்படுகின்றது. போலந்தோடு தொடர்பில்லாத பல கொடிகள் இதை ஒத்ததாகக் காணப்படுகின்றன. [[இந்தோனேசியா]], [[மொனாக்கோ]] ஆகிய நாடுகள் மேலே சிவப்பு நிறத்தையும், கீழே வெள்ளை நிறத்தையும் கொண்டுள்ளன. போலந்திலும் தேசிய வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்ட பல கொடிகள் தேசிய நிறங்களைக் கொண்டுள்ளன.
 
== வடிவமைப்பு ==
=== சட்ட அடிப்படை ===
1997 இன் போலந்துக் குடியரசின் அரசியல் சட்டத்திலும்; 1980 இன், போலந்துக் குடியரசின் மரபுச் சின்னம், நிறங்கள், தேசிய கீதம் மற்றும் அரச முத்திரைகள் சட்டத்திலும் (மரபுச் சின்னங்கள் சட்டம்); போலந்துக் குடியரசின் நிறம், கொடி ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன. தேசியச் சின்னங்கள் தொடர்பான சட்டங்கள் முழுமை பெறவில்லை. மரபுச் சின்னங்கள் சட்டம் பலமுறை திருத்தப்பட்டதுடன், பல்வேறு நிறைவேற்று அரசாணைகளையும் இச்சட்டம் குறிப்பிடுகின்றது. ஆனால், இந்த அரசாணைகளிற் சில இன்னும் வெளியாகவில்லை. அத்துடன், சட்டங்களில் தவறுகளும், விடுபடல்களும், முரண்பாடுகளும் காணப்படுவதால், குழப்பமாக உள்ளதுடன், பல்வேறு விளக்கங்களுக்கும் இடமளிப்பதாக உள்ளது.
 
[[பகுப்பு:தேசியக் கொடிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2503017" இருந்து மீள்விக்கப்பட்டது