"போலந்துக் கொடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

282 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
== வடிவமைப்பு ==
=== சட்ட அடிப்படை ===
1997 இன் போலந்துக் குடியரசின் அரசியல் சட்டத்திலும்;<ref name="const">Konstytucja Rzeczypospolitej Polskiej</ref> 1980 இன், போலந்துக் குடியரசின் மரபுச் சின்னம், நிறங்கள், தேசிய கீதம் மற்றும் அரச முத்திரைகள் சட்டத்திலும் (மரபுச் சின்னங்கள் சட்டம்);<ref name="act">Ustawa o godle... (1980, with amendments)</ref> போலந்துக் குடியரசின் நிறம், கொடி ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன. தேசியச் சின்னங்கள் தொடர்பான சட்டங்கள் முழுமை பெறவில்லை. மரபுச் சின்னங்கள் சட்டம் பலமுறை திருத்தப்பட்டதுடன், பல்வேறு நிறைவேற்று அரசாணைகளையும் இச்சட்டம் குறிப்பிடுகின்றது. ஆனால், இந்த அரசாணைகளிற் சில இன்னும் வெளியாகவில்லை. அத்துடன், சட்டங்களில் தவறுகளும், விடுபடல்களும், முரண்பாடுகளும் காணப்படுவதால், குழப்பமாக உள்ளதுடன், பல்வேறு விளக்கங்களுக்கும் இடமளிப்பதாக உள்ளது.<ref name="nik">Informacja o wynikach kontroli... (NIK, 2005)</ref>
 
=== தேசிய நிறங்கள் ===
அரசியல் சட்டத்தின் அத்தியாயம் 1, பிரிவு 28, பத்தி 2 இல் போலந்தின் தேசிய நிறங்கள் வெள்ளையும், சிவப்பும் எனக் குறிக்கப்பட்டுள்ளது.<ref name="const" /> மரபுச் சின்னங்கள் சட்டத்தின் 4 ஆம் பிரிவு இது பற்றி மேலும் விளக்குகிறது. இதில், கிடையானவையும், ஒன்றுக்கொன்று இணையானவையும், சமமான அகலம் கொண்டவையுமான பட்டிகளாக இவை அமைய வேண்டும் எனவும் மேலே வெள்ளையும், கீழே சிவப்பும் இருக்கவேண்டும்<ref name="act" /> எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது. நிறங்களைக் நிலைக்குத்தாகக் காட்சிப்படுத்தவேண்டி இருந்தால், வெள்ளை நிரம் பார்ப்பவருக்கு இடப் பக்கத்தில் இருக்கவேண்டும்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:தேசியக் கொடிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2503025" இருந்து மீள்விக்கப்பட்டது