கலிபோர்னியா தங்க வேட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கலிபோர்னியா தங்க வேட்டை''' (California Gold Rush) (1848-1855), [[கலிபோர்னியா]]வின் கொலமாவில் இருந்த சட்டரின் மர ஆலையில் யேம்சு டபிள்யூ மார்சல் என்பவரால் [[தங்கம்]] கண்டுபிடிக்கப்பட்ட 1958 சனவரி 24 இல் தொடங்கியது. தங்கம் கிடைத்தது பற்றிய செய்தியால் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் பிற பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் 300,000 மக்கள் வரை கலிபோர்னியாவில் குவிந்தனர். சடுதியான மக்கள் உள்வரவும் தங்கத்தின் வருகையும் அமெரிக்கப் பொருளாதாரத்துக்குப் புதுவலுவைக் கொடுத்தது. அத்துடன், பிரதேசத் தகுதிக்குச் செல்லாமல் நேரடியாகவே 1850 இல் மாநிலத் தகுதியைப் பெற்ற மிகச் சில அமெரிக்க மாநிலங்களில் ஒன்றாகக் கலிபோர்னியா ஆனது. இந்தத் தங்க வேட்டை, கலிபோர்னியாவின் தாயக மக்களில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. இது நோயாலும், இன அழிப்பாலும், பட்டினியாலும் அவர்களின் வேகமான மக்கள்தொகை வீழ்ச்சிக்கு வழிகோலியது. தங்க வேட்டை முடிவடைந்த போது, கலிபோர்னியா ஐதாக மக்கள் வாழ்ந்த முன்னாள் மெக்சிக்கப் பகுதி என்னும் நிலையில் இருந்து, 1856 இல் புதிய குடியரசுக் கட்சியின் முதல் சனாதிபதி வேட்பாளரின் சொந்த மாநிலம் என்ற தகுதிக்கு உயர்ந்துவிட்டது.
 
[[பகுப்பு:அமெரிக்க வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/கலிபோர்னியா_தங்க_வேட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது