ரூமிலா தாப்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
ஆசிய ஐரோப்பா நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று தம் வரலாற்று ஆய்வைச் செய்தார். சீனாவில் உள்ள புத்தர் காலக் குகைகளைப் பார்த்தார். ஆரியர்களின் வரலாறு முதல் முசுலிம்களின் வருகை வரை உள்ள வரலாற்றை எழுதியுள்ளார். [[அசோகர்]] பற்றியும் மௌரியப் பேரரசின் வீழ்ச்சிபற்றியும் ஒரு நூலில் எழுதினார். [[சோமநாதபுரம் (குசராத்து)|சோமநாத் கோவில் மீது]] நடந்த படையெடுப்புக்குப் பின் ஏற்பட்ட விளைவுகள் பற்றியும் ஒரு நூல் எழுதினார். இந்திய நாடு மதச் சார்பில்லாமல் அமைய வேண்டியத் தேவைகளை வலியுறுத்திக் கூறுபவர். இந்துத்துவக் கொள்கைக்கு எதிரானவர். ஆணாதிக்க எண்ணம் பெண்களை அடக்கியும் ஒடுக்கியும் வைத்த வரலாறு எப்படி எப்போது தொடங்கியது பற்றியும் ஆய்வு செய்துள்ளார். அடிப்படை வாதம் பேசுவோரும் நேர்மையற்ற அரசியல்வாதிகளும் வரலாற்றைத் திரித்து மக்களிடம் பரப்பிவருகிறார்கள் என்பது அவர் கருத்து. அரசியல் நோக்கில் வரலாறு எழுதப்படுதல் கூடாது என்றும் வரலாறு அரசியலின் குறுகிய நோக்கங்களுக்கு பலி ஆகக் கூடாது என்றும் சொல்லி வருகின்றார்.
 
==தகைமைகள்==
==பதவிகள்==
* ஆக்சுபோர்டில் லேடி மார்கரட் ஆல் என்பதில் மதிப்புமிகு உறுப்பினராக அமர்த்தப்பட்டார்.
* கார்லைல் பல்கலைக் கழகம் பென்சில்வேனியா பல்கலைக் கழகம் காலேஜ் தி பிரான்சு பாரீசு ஆகியவற்றில் வருகைப் பேராசிரியராக இருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ரூமிலா_தாப்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது