2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
cc
வரிசை 14:
}}
[[படிமம்:Know enu.jpg|thumb|100px|கணக்கெடுக்கும் பெண் இலச்சினை]]
'''15 வது இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு''' வீட்டை பட்டியலிடுதல், மக்கள் தொகை கணக்கெடுப்பு என இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. முதற்கட்டமான வீட்டை பட்டியலிடுதலில், அனைத்து கட்டிடங்களை பற்றிய தகவல்கள் சேகரிப்பு ஏப்ரல் 101, 2010 அன்று தொடங்கியது. [[தேசிய மக்கள் தொகை பதிவேடு|தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கானத்]] தகவல்களும் இந்த முதற்கட்டப் பணியின்போது சேகரிக்கப்பட்டன. பதியப்பட்ட அனைத்து இந்தியர்களுக்கும், [[இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு|இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையத்தால்]] ஒரு [[ஆதார் அடையாள அட்டை|12 இலக்க தனிப்பட்ட அடையாள எண்]] வெளியிடுவதற்கு இந்தப் பதிவேட்டிற்காக சேகரிக்கப்பட்டத் தகவல்கள் பயன்படுத்தப்பட்டன. இரண்டாம் கட்டமான மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2011 பிப்ரவரி 9-28 இடையே நடத்தப்பட்டது.
 
இந்தியாவில் மக்களின் எண்ணிக்கை, பொருளாதாரம், [[எழுத்தறிவு]] மற்றும் [[கல்வியறிவு]], பெற்றோர் விகிதம், உறைவிட விவரம், நகரமயமாக்கம், பிறப்பு மற்றும் இறப்பு விகிதங்கள், [[பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகள்]], [[மொழி]], [[மதம்]], இடம் பெயர்ந்தோர், [[மாற்றுத்திறனாளி]]கள் ஆகியவை பற்றிய விவரங்களை சேகரிக்க அரசாங்கத்தால் எடுக்கப்படும் நடவடிக்கையாகும். ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 1872-லிருந்து இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது, இருப்பினும் 2011-ல்தான் முதன்முறையாக உயிரியளவு தகவல்கள் சேகரிக்கப்பட்டன.