"டபிள்யூ. பி. யீட்சு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

153 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
[[19ம் நூற்றாண்டு|19]] மற்றும் 20ம் நூற்றாண்டுகளின் [[ஐரிய இலக்கிய மறுமலர்ச்சி]]க்கு வித்திடவர் இவரே. யீட்சு [[லேடி கிரகோரி]] மற்றும் [[எட்வார்ட் மார்ட்டின்|எட்வார்ட் மார்ட்டினுடன்]] இணைந்து [[டப்ளின்|டப்ளினின்]] புகழ்பெற்ற ஆபி நாடக அரங்கை உருவாக்கினார். அரங்கின் ஆரம்பக் காலத்தில் அதன் தலைவராகவும் பணியாற்றினார். [[1923]]ம் ஆண்டு யீட்சுக்கு [[இலக்கியம்|இலக்கியத்துக்கான]] [[நோபல் பரிசு]] வழங்கப்பட்டது. நோபல் பரிசினை பெற்ற பிறகு தங்களது மிகச்சிறந்த படைப்புகளைப் படைத்த ஒரு சில படைப்பாளிகளுள் யீட்சும் ஒருவர். டப்ளினில் பிறந்த யீட்சு தனது இளவயதில் கிரேக்க தொன்மவியல் கதைகளையும், நாட்டார் கதைகளையும் விரும்பிப் படித்தார். அவற்றின் தாக்கம் அவரது இலக்கிய வாழ்வின் முதற்கட்டத்தில் படைத்த படைப்புகள் (19ம் நூற்றாண்டின் முடிவு வரை) தெரிகிறது. 1889ம் ஆண்டு அவரது முதல் கவிதைப் படைப்பு வெளியானது. அவரது ஆரம்பகால கவிதைகளில் [[எட்மண்ட் ஸ்பென்சர்]] மற்றும் [[பெர்சி பைஷ் ஷெல்லி]] ஆகியோரின் தாக்கமும் தெரிகிறது. 20ம் நூற்றாண்டில் யீட்சு தனது இளமைக்கால கடந்தநிலைவாத (transcendentalism) கருத்துகளை விடுத்து, தனது படைப்புகளில் யதார்த்தவாதத்தை பின்பற்றத் தொடங்கினார். யீட்சு தனது வாழ்நாளின் பல்வேறு காலகட்டங்களில் [[தேசியவாதம்]], [[தாராண்மையியம்|செவ்வியல் தாராண்மையியம்]], [[எதிர்வினைப் பழமைவாதம்]] [[பெருமாற்ற அழிவுவாதம்]] போன்ற பல்வேறு கொள்கைகளைப் பின்பற்றினார்.
 
==இவற்றையும் பார்க்க==
*[[பைசாந்தியத்தை நோக்கிய கடல்பயணம்]]
 
== வெளி இணைப்புகள் ==
1,17,847

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2504498" இருந்து மீள்விக்கப்பட்டது