ரூமிலா தாப்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
''பண்டைய இந்தியச் சமூக வரலாறு'' எனும் தாப்பரின் நூல் தொடக்க காலகட்டத்தில் இருந்து கி.பி முதல் ஆயிரம் ஆண்டுகள் வரையிலான இந்து, புத்த சமயங்களின் ஒப்பீட்டு ஆய்வாகும். இது புத்த மதம் சாதியமைப்பை எதிர்த்து பல சாதிகளின் இணக்கமான உறவுக்கு பாடுபட்டது என்பதை விவரிக்கிறது. ''குலக் கால்வழியில் இருந்து அரசு உருவாக்கம் வரை'' எனும் இவரது நூல் கி.பி முதல் ஆயிரம் ஆண்டுகளில் நடுவண் கங்கைப் பள்ளத்தாக்கில் அரசு உருவாக்க நிகழ்வைப் பகுத்தாய்கிறது. இம்மாற்றத்தில் இரும்பும் ஏர்க்கலப்பையும் உந்திய வேளாண் புரட்சியின் பாத்திரத்தை படிப்படியாக விளக்குகிறார். இதில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்ட தொடர்ந்து இடம் மாறும் கால்வழி சார்ந்த முல்லைநிலச் சமூகம் ஒர்ரிட்த்தில் நிலைத்து வாழும் உழவர்ச் சமூகமாக, அதாவது உடைமைகளும் செல்வத் திரட்சியும் நகர்மயமாக்கமும் விளைந்த சமூகமாக மாறியதைக் காட்டுகிறார்.<ref>{{cite book | title = A Textbook of Historiography, 500 B.C. to A.D. 2000 | author = E. Sreedharan | publisher = Orient Longman | year = 2004 | isbn = 81-250-2657-6 | pages = 479–480 }}</ref>
 
==வரலாற்றுப்பணி==
இவர் ஆசிய ஐரோப்பா நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று தம் வரலாற்று ஆய்வைச் செய்தார். சீனாவில் உள்ள புத்தர் காலக் குகைகளைப் பார்த்தார். ஆரியர்களின் வரலாறு முதல் வருகையில் இருந்து முசுலிம்களின் வருகை வரை உள்ள வரலாற்றை எழுதியுள்ளார். [[அசோகர்]] பற்றியும் மௌரியப் பேரரசின் வீழ்ச்சிபற்றியும் ஒரு நூலில் எழுதினார். [[சோமநாதபுரம் (குசராத்து)|சோமநாத் கோவில் மீது]] நடந்த படையெடுப்புக்குப் பின் ஏற்பட்ட விளைவுகள் பற்றியும் ஒரு நூல் எழுதினார். இந்திய நாடு மதச் சார்பில்லாமல் அமைய வேண்டியத் தேவைகளை வலியுறுத்திக் கூறுபவர். இந்துத்துவக் கொள்கைக்கு எதிரானவர். இவர் ஆணாதிக்க எண்ணம் பெண்களை அடக்கியும் ஒடுக்கியும் வைத்த வரலாறு எப்படி எப்போது தொடங்கியது பற்றியும் ஆய்வு செய்துள்ளார். அடிப்படை வாதம் பேசுவோரும் நேர்மையற்ற அரசியல்வாதிகளும் வரலாற்றைத் திரித்து மக்களிடம் பரப்பிவருகிறார்கள் என்பது அவர் கருத்து. அரசியல் நோக்கில் வரலாறு எழுதப்படுதல் கூடாது என்றும் வரலாறு அரசியலின் குறுகிய நோக்கங்களுக்கு பலி ஆகக் கூடாது என்றும் சொல்லி வருகின்றார்.
 
==தகைமைகள்==
"https://ta.wikipedia.org/wiki/ரூமிலா_தாப்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது