மரபணுப் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: (edited with ProveIt)
வரிசை 1:
 
'''மரபணு பொறியியல்''' (Genetic engineering) அல்லது '''மரபணு மாற்றமைவு''' (Genetic Modification) அல்லது '''மரபணு கையாளுகை''' (Genetic manipulation) என்பது
[[உயிரித் தொழில்நுட்பம்|உயிரித் தொழில்நுட்பத்தைப்]] பயன்படுத்தி, ஒரு [[உயிரினம்|உயிரினத்தின்]] [[மரபணு|மரபணுவை]] நேரடியாக கையாளுதல் ஆகும். இந்த முறையில் [[உயிரணு]]க்களின் [[மரபியல்]] அமைப்பானது பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாற்றப்படுகின்றது. மரபணுக்களை ஒரே [[இனம் (உயிரியல்)|இனத்திற்குள்ளேயோ]] அல்லது வேவ்வேறு இனத்திற்கிடையிலேயோ இடமாற்றம் செய்வதனால், ஒரு இனத்தை முன்னேற்றவோ, அல்லது ஒரு புதிய இனத்தை உருவாக்கவோ செய்வதும் மரபணுப் பொறியியலில் அடங்கும். கலப்பு [[டி.என்.ஏ]] ([[:en:Recombinant DNA]]) முறையைப் பயன்படுத்தி விரும்பத்தக்க மரபியல் பொருண்மத்தை தனிப்படுத்துவதால், அல்லது பிரதி செய்வதனாலோ அல்லது செயற்கை முறையில் டி.என்.ஏ யைத் தயாரிப்பதனாலோ புதிய டி.என்.ஏ யை உருவாக்கலாம். அப்படியாக உருவாக்கப்படும் புதிய டி.என்.ஏ துண்டத்தை, இன்னொரு உயிரினத்தின் டி.என்.ஏ யுடன் இணைத்துவிடலாம். இந்த இணைப்பு எழுந்தமானமாக ஒரு இடத்திலோ அல்லது குறிப்பிட்ட இலக்கு குறிக்கப்பட்ட இடத்திலோ இணைக்கப்படலாம். இணைத்தல் செயல்முறையால் மட்டுமல்லாமல், குறிப்பிட்ட ஒரு மரபணுப்ப பகுதியை நீக்குவதன் மூலமும் ([[:en:Gene knockout]]) மாற்றத்தை ஏற்படுத்தி, புதியவகை மரபியல் இயல்புகளைப் பெறலாம்.
 
இவ்வாறு மரபணுப் பொறியியலுக்கு உட்படுத்தலின் மூலம் உருவாகும் உயிரினம் மரபணு மாற்றமைவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கருதப்படுவதுடன், [[மரபணு மாற்றப்பட்ட உயிரினம்]] என அழைக்கப்படும். 1973 இல், முதன் முதலில் Herbert Boyer, Stanley Cohen ஆகியோர் இவ்வாறான ஒரு [[பாக்டீரியா]]வை உருவாக்கினர்<ref name="GPF">{{cite web | url=http://americanradioworks.publicradio.org/features/gmos_india/history.html | title=Rudolf Jaenisch | publisher=American Public Media | work=The Global Politics of Food | accessdate=3 ஏப்ரல் 2018}}</ref>. 1974 இல் Rudolf Jaenisch என்பவர் ஒரு மரபணு மாற்றப்பட்ட எலியை உருவாக்கினார்.<ref>{{cite web | url=http://www.transgenicmouse.com/transgenesis-history.php | title=Transgenic History | publisher=transgenicmouse.com | accessdate=3 ஏப்ரல் 2018}}</ref>
 
கூடிய உற்பத்தி தரும் [[விதை]]கள், பழுதடையா [[காய்கறி]]கள், [[மரபணு மாற்றப்பட்ட உயிரினம்]], [[செயற்கை உடல் உறுப்பு|செயற்கை உடல் உறுப்புகள்]], செயற்கை [[இன்சுலின்]] உருவாக்கம் என பல தரப்பட்ட பயன்பாடுகள் மரபணு பொறியியலுக்கு உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/மரபணுப்_பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது