தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
DrRom (பேச்சு | பங்களிப்புகள்)
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
DrRom (பேச்சு | பங்களிப்புகள்)
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 83:
தமிழ், தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான [[கர்நாடகம்]], [[கேரளம்]] மற்றும் [[மகாராஷ்டிரம்|மகாராட்டிர]]த்திலும், இலங்கையில் [[கொழும்பு]] மற்றும் மத்திய [[மலையகத் தமிழர்|மலை நாட்டு]]ப் பகுதிகளிலும் [[இலங்கைச் சோனகர்|முஸ்லிம்]]கள் வாழும் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது
 
தமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஒப்பந்தக் கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர். அவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின. இவர்களின் வழிவந்தவர்கள் இன்று [[சிங்கப்பூர்]], [[மலேசியா]], [[மொரீசியஸ்]] போன்ற நாடுகளில் குறிப்பிடத் தக்க குடித்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். [[தென்னாப்பிரிக்கா]], [[கயானா]], [[பிஜி]], [[சுரினாம்]] மற்றும் [[ட்ரினிடாட்டும்ட்ரினிடாட், டொபாகோவும்டொபாகோ]] போன்ற நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும், அந்நாடுகளில் அவர்கள் தமிழ் மொழியை அவர்கள்மொழியைப் பேசுவதில்லை.
 
மிக அண்மைக்காலங்களில், பெரும்பாலும் இலங்கையின் இன முரண்பாடுகள் காரணமாக அகதிகளாக அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்களும், ஓரளவு பொருளாதாரக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்தவர்களுமாக, பல தமிழர்கள் [[ஆஸ்திரேலியா]], [[கனடா]], [[ஐக்கிய அமெரிக்கா]] மற்றும் பெரும்பாலான [[ஐரோப்பா|ஐரோப்பிய]] நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது இவர்களில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை ஒரு உயிர்ப்புள்ள மொழியாக வழங்கி வந்தபோதிலும், இளைய தலைமுறையினர் பலர் தமிழ் மொழியைப் பயன்படுத்த இயலாதவர்களாகவும், ஆர்வமற்றவர்களாகவும் வளர்ந்து வருவதை கவனிக்க முடிகின்றது.
 
=== ஆட்சி மொழி அங்கீகாரம் ===
தமிழ் [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] ஆட்சி மொழியாகும். அத்துடன் [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்பின்]] [[இந்திய அரசியலமைப்பிலுள்ள எட்டாவது பட்டியல்|எட்டாவது பட்டியலில்]] குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. [[இலங்கை]]யில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. இந்தியாவில் [[தமிழ்நாடு]] மாநிலத்திலும் [[புதுச்சேரி]] [[ஒன்றியப் பகுதி (இந்தியா)|ஒன்றியப் பகுதியிலும்]] தமிழ் அரச அலுவல் மொழியாக இருக்கிறது. [[சிங்கப்பூர்]] நாட்டிலும் நாடளாவிய மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இடம் பெற்றுள்ளது. [[தென்னாபிரிக்காதென்னாப்பிரிக்கா]]விலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது. மலேசியாவிலும் முதல் நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் இடம்பெற்றுள்ளது. மலேசியாவில் தொடக்க இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 523 [http://www.tamilpalli.6te.net/ தமிழ்த் தொடக்கப்பள்ளிகள்] அரசுப் பள்ளிகளாக இயங்குகின்றன.
 
=== இந்தியாவில் செம்மொழி அங்கீகாரம் ===
இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புக்களினதும், அறிஞர்களினதும் நீண்ட கால முயற்சிகளைத் தொடர்ந்து <ref>பர்க்லேயிலுள்ள கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவரான ஜார்ஜ் எல் ஹார்ட் 2004 ஆண்டில் வெளியிட்ட அறிக்கையை [http://tamil.berkeley.edu/Tamil%20Chair/TamilClassicalLanguage/TamilClassicalLgeLtr.html இங்கே] காண்க.</ref> இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின்போது, [[2004]] ஆம் ஆண்டு [[சூன் 6]] ஆம் நாள் அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் [[அப்துல் கலாம்|அப்துல் கலாமால்கலாம்]]-ஆல் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டது.<ref>''[http://presidentofindia.nic.in/scripts/eventslatest1.jsp?id=587 குடியரசுத் தலைவரின் பேச்சின்-கூற்று 41 யும்], [http://news.bbc.co.uk/2/hi/south_asia/3667032.stm இந்திய அமைச்சரவையின் முறையான அங்கீகாரம்] தொடர்பான [[பிபிசி]] செய்தியையும் காண்க.</ref>
 
== பேச்சுத்தமிழ் - உரைநடைத்தமிழ் வேறுபாடுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது