இந்து சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இந்து என்கிற வார்த்தை எங்கிருந்து வந்தது !
வரிசை 121:
== வரலாறு ==
 
இயற்கையின் நிகழ்வுகளான [[இடி]], [[மின்னல்]], காட்டு[[நெருப்பு]] போன்றவற்றினைக் கண்டு பயந்த ஆதி மனிதன், அவற்றைக் கடவுள்களாக வழிபடத்தொடங்கினார்கள். [[சூரிய தேவன்]], [[சந்திர தேவன்]], [[அக்னி தேவன்]], [[வருண தேவன்]] என இயற்கையே முதல் கடவுளாகவும், இவற்றை இயக்குகின்ற சக்தியான பரம்பொருளாகவும் உணரப்பட்டது. இவை சிந்து நதிக்கரையில் நிகழ்ந்ததாகவும், இவர்களில் ஒரு பிரிவினரே தற்போதைய ஐரோப்பாவிற்கு இடம் பெயர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவர்களை வரலாற்று ஆசிரியர்கள் ஆரிய இனத்தவர் என்று அழைக்கின்றனர்.
 
பல்வேறு [[முனிவர்]]களாலும், முன்னோர்களாலும் செவி வழியாகக் கடத்தப்பட்ட [[வேதம்]] எனும் வாழ்வியல் முறையை விளக்கமானது, நாகரீகம் வளர்ந்த பின் ஓலைச்சுவடியில் பதியப்பட்டது. இந்த வேதங்களில் உள்ள [[ரிசா]], [[குபா]], [[கரமு]] போன்ற [[ஆறு]]கள் ஆப்கான் தேசத்தினை சேர்ந்தவை என்பதால், சிந்து நதி நாகரீகம் அதுவரை பரவியிருந்ததாகக் கூறப்பெறுகிறது. இவ்வாறான வேதத்தினை முன்நிறுத்துகின்ற [[மதம்]] வேதமதமெனவும் அழைக்கப்பெறுகிறது.
 
வேதத்தின் உட்பொருளைக் கொண்டு எளிமையாக மக்களுக்குக் கூறுவதற்காக உபநிடதங்கள் உருவாயின. அதனினும் எளிமையாகக் கதைவடிவில் வேதம் மற்றும் உபநிடதங்களை விளக்குவதற்காகப் புராணங்கள் தோற்றுவிக்கப்பெற்றன. இவற்றில் பதினெட்டு புராணங்கள் மகாபுராணங்கள் என்றும், சில உபபுராணங்கள் என்றும் அழைக்கப்பெறுகின்றன.
 
[[ஆரியர்]]களின் வருகைக்கு முன்பு, ஏறத்தாழ 450 மதங்கள் இந்தியப்பகுதியில் இருந்துள்ளன. அவற்றோடு வேதமதம் இரண்டறக் கலந்து தற்போதுள்ள இந்து மதமாக அறியப்பெறுகிறது.
 
== ஒரு சுருக்கமான மேலோட்டம் ==
வரி 134 ⟶ 132:
இந்து சமயம் [[வேதம்|வேதங்களையும்]], தொடர்ந்து வந்த [[உபநிடதம்|உபநிடதங்கள்]] மற்றும் காலங்காலமாகப் பல்வேறு குருமார்களின் அறிவுரைகளையும் ஆதாரமாகக் கொண்ட ஆன்மீக அடிப்படையில் தங்கியுள்ளது. வேத/தத்துவஞானப் பிரிவுகள், [[பக்தி யோகம்]], [[கர்ம யோகம்]] [[ஞான யோகம்]] மற்றும் [[யோகா]], [[தந்திரம்|தந்திர]] ஆகமப் பிரிவுகள் என்பவற்றிலிருந்து ஊற்றெடுக்கும் சிந்தனையோட்டங்கள் அனைத்தும் இந்து சமயம் என்கின்ற ஒரே சமுத்திரத்திலே சங்கமமாகின்றன.
 
=== சனாதன தர்மம் ===
சனாதன தர்மம். அதன் நூல்கள் நான்கு வேதங்களும்,புராணங்களும்.....  etc
{{main|சனாதன தர்மம்}}
 
இதை ஆதியில் பகவானால் பிரம்மாவிற்க்கும்,பின் பிரம்மா நாரதருக்கும்,நாரதர் வியாசருக்கும்...இப்படி படிபடியாக சீடபரம்பரை மூலம் இறங்கி வந்தது...
 
'''யேச வேதவிதோ விப்ரா:'''
 
'''யே சாத்த்யாத்ம விதோ ஜநா: I'''
 
'''தே வதந்தி மஹாத்மாநம்'''
 
'''கிருஷ்ணம் தர்மம் ஸநாதநம்''' II
 
-மஹாபாரதம் - 3.48-267
 
என்றபடி வேததர்மமான ஸநாதன தர்மத்தின் (இந்து மதத்தின்) ஸர்வ வல்லமை மிக்க  கடவுள் ஸ்ரீமந் நாராயணனே / கிருஷ்ணரே.
 
ஸநாதன என்ற வார்த்தையை "ஆதி அந்தம் இல்லாத" என்று கூறுகின்றனர். எனவே, அதற்குத் தொடக்கமும் முடிவுமில்லை என்றே கொள்ளுதல் வேண்டும்.
 
எனவே, ஸநாதன தர்மம் என்பது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் மத வழிமுறையல்ல. இவ்வழிமுறை நித்தியமான ஜீவன் நித்தியமான முழுமுதற் கடவுளுடன் உறவு கொள்ளக்கூடிய நித்தியமான செயலாகும்.
 
ஆங்கில வார்த்தையான ரிலிஜன் (religion) என்பது ஸநாதன தர்மம் என்பதிலிருந்து சற்று வேறுபட்டதாகும். ரிலிஜன் என்பது ஒரு வித நம்பிக்கையைக் குறிக்கும்—ஆனால் நம்பிக்கை என்பது மாறக்கூடும். ஒரு குறிபிட்ட முறையில் ஒருவருக்கு நம்பிக்கை இருக்கலாம், அவர் தமது நம்பிக்கையை மாற்றி வேறொரு முறையைக் கடைபிடிக்கலாம். ஆனால் ஸநாதன தர்மம் என்பது மாற்ற முடியாத செயலைக் குறிக்கின்றது. உதாரணமாக, நீரிலிருந்து திரவத் தன்மையும், நெருப்பிலிருந்து வெப்பத்தையும் பிரித்து விட முடியாது. அதுபோலவே, நித்திய உயிர்வாழியின் நித்தியமான செயலைக் அதிலிருந்து பிரிக்க முடியாது. ஸநாதன தர்மம் உயிர்வாழியுடன் நித்தியமாக தொடர்பு கொண்டுள்ளது.
 
அஃது ஆரம்பமும் முடிவும் அற்றது என்றே கொள்ள வேண்டும். தொடக்கமும் முடிவும் இல்லாது, எல்லைகளால் வரையறுக்கப்பட முடியாமல் திகழக்கூடிய ஒன்றை ஒரு குறிப்பிட்ட (மதப்) பிரிவைச் சார்ந்ததாக ஒரு போதும் கருதக் கூடாது. ஒரு குறிப்பிட்ட (மத) நம்பிக்கையைச் சேர்ந்த சிலர் ஸநாதன தர்மமும் ஒரு (மதப்) பிரிவென்று தவறாகக் கருதுவர். ஆனால் இது விஷயமாக நாம் ஆழமாகப் சென்று, நவீன விஞ்ஞானத்தின் கவனித்து பார்த்தால், ஸநாதன தர்மமானது, இவ்வுலகின் எல்லா மக்களுடைய, ஏன், பிரபஞ்சத்திலுள்ள எல்லா உயிர்களுடைய கடமை என்பதை அறிய முடியும்.
 
ஸநாதனமல்லாத மத நம்பிக்கைக்கு மனித வரலாற்றின்; கால அட்டவணையில் ஏதாவது தொடக்கம் இருக்கலாம், ஆனால் உயிர்களுடன் நித்தியமாக இருக்கும் ஸநாதன தர்மத்தின் வரலாற்றில் இது போன்ற ஆரம்பமே இல்லை. அதிகாரபூர்வமான சாஸ்திரங்கள், உயிர்வாழிகளுக்கு பிறப்போ இறப்போ இல்லை என்று கூறுகின்றன.
 
ஒரு குறிப்பிட்ட பொருளுடன் ஒன்றியிருக்கும் தன்மையை தர்மம் எனும் சொல் குறிக்கிறது. நெருப்புடன் வெப்பமும் ஒளியும் இருக்கிறதென்று நாம் முடிவு செய்கிறோம், வெப்பமும் ஒளியும் இல்லாவிடில் நெருப்பு என்ற சொல்லுக்கு பொருளே இல்லை. இது போன்ற உயிர்வாழியின் முக்கியமான இன்றியமையாத அங்கத்தை நாம் கண்டு பிடிக்க வேண்டும். அந்த இன்றியமையாத அங்கம் அதன் நித்திய குணமாகும், அந்த நித்திய குணம் அதன் நித்திய தர்மமகும்.
 
உயிர் வாழியின் உண்மைநிலை (ஸ்வரூப), புருஷோத்தமரான முழுமுதற் கடவுளுக்கு சேவை செய்வதே. இதுவே சனாதன தர்மம்.
 
ஒவ்வொரு உயிர்வாழியும் மற்றொரு உயிருக்கு சேவை செய்வதில் எப்போதும் ஈடுபட்டுள்ளதை நம்மால் எளிதாகக் காண முடியும். ஓர் உயிர்வாழி மற்ற உயிர்வாழிகளுக்கு பல்வேறு விதங்களில் சேவை செய்கிறான், அவ்வாறு செய்வதால் வாழ்வை அனுபவிக்கிறான். சேவகன் எஜமானுக்கு சேவை செய்வதைப் போல, கீழ் நிலை மிருகங்கள் மனிதனுக்கு சேவை செய்கின்றன. ஒருவன் தனது எஜமானருக்கு சேவை செய்ய, அவர் அடுத்தவருக்கும், அடுத்தவர் மற்றொருவருக்கும் என தொடர்ந்து ஒவ்வொருவரும் சேவை செய்து கொண்டுள்ளனர்.
 
இருந்தும், ஒரு குறிப்பிட்ட நேரம் சூழ்நிலை இவற்றின் அடிப்படையில் மனிதன் தன்னை ஒரு குறிப்பிட்ட (மத) நம்பிக்கையைச் சேர்ந்தவனாக, இந்து, முஸ்லிம், கிறிஸ்துவன், பௌத்தன் அல்லது வேறு ஒரு பிரிவைச் சேர்ந்தவனாகக் காட்டிக் கொள்கிறான். இத்தகு அடையாளங்கள் ஸநாதன தர்மமல்ல. ஓர் இந்து தனது நம்பிக்கையை மாற்றி முஸ்ஸிமாகவும், ஒரு முஸ்ஸிம் தனது நம்பிக்கையை மாற்றி இந்துவாகவும், ஒரு கிறுஸ்துவன் தனது நம்பிக்கையை மாற்றி வேறொரு மதத்தினாகவும் மாறிக்கொண்டே போகலாம். ஆனால், பிறருக்குச் சேவை செய்தல் எனும் நித்தியக் கடமையானது எந்த சூழ்நிலையிலும் மத நம்பிக்கை மாற்றத்தால் பாதிக்கப்படுவதில்லை. இந்துவோ முஸ்ஸிமோ கிறிஸ்தவனோ எல்லாச் சூழ்நிலையிலும் ஒவ்வொருவரும் யாரோ ஒருவரது சேவகனே. எனவே ஒரு குறிப்பிட்ட (மத) நம்பிக்கையைப் பயிற்சி செய்வது ஸநாதன தர்மத்தை பயிற்சி செய்வ தாகாது. சேவை செய்வதே ஸநாதன தர்மாகும்.
 
உண்மையில், நாம் முழுமுதற் கடவுளுடன் சேவையின் மூலம் உறவு கொண்டுள்ளோம். முழுமுதற் கடவுள் பரம அனுபவிப்பாளராவார். உயிர்வாழிகளான நாம் அவரது சேவகர்கள். நாம் அவரது ஆனந்திற்காகப் படைக்கப்பட்டுள்ளோம், பரம புருஷ பகவானின் அந்த நித்திய இன்பத்தில் பங்குபெற்றால் நாமும் மகிழ்ச்சியுடையவராக ஆவோம். இல்லையேல் நாம் மகிழ்ச்சியடைய முடியாது. சுயமாக மகிழ்வது இயலாது. உதாரணமாக, உடலின் எந்த பகுதியும் வயிற்றுடன் ஒத்துழைக்காமல் மகிழ இயலாது. முழுமுதற் கடவுளுக்கு திவ்யமான அன்புக் தொண்டு புரியாமல் உயிர்வாழி மகிழ்ச்சியாயிருத்தல் என்பது சாத்தியமல்ல.
 
எனவே, ஸநாதன தர்மம் என்பது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் மத வழிமுறையல்ல. இவ்வழிமுறை நித்தியமான ஜீவன் நித்தியமான முழுமுதற் கடவுளான பகவான் நாராயணர்/க்ரிஷ்ணருடன் உள்ள  உறவு முறை  கொள்ளக்கூடிய நித்தியமான செயலாகும்.
"சனாதன தர்மம்" அல்லது "நிலையான தத்துவஞானம்/இசைவு/நம்பிக்கை" என்பதே பல ஆயிரம் ஆண்டுகளாக இந்து சமயத்தைக் குறித்துவந்த பெயராகும். இந்துக்களைப் பொறுத்தவரை, இது, மனிதனால் உருவாக்கப்பட்டவற்றைக் கடந்து, தனிமனித விருப்பு வெறுப்புக்களைக் குறியாது, தூய உணர்வுபூர்வமான அறிவியலைக் குறிக்கும் சில ஆன்மீகக் கொள்கைகள் என்றும் நிலையானவையாக இருக்கின்றன என்ற எண்ணத்தைப் பற்றிப் பேசுகின்றது.
 
=== யோக தர்மம் ===
"https://ta.wikipedia.org/wiki/இந்து_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது