மகாயான பௌத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 37:
எல்லா உயிர்களும் மோட்சமடைய வாய்ப்புள்ளவர்கள் என்பதே மகாயான பௌத்தத்தின் அடிப்படைத் தத்துவம். மேலும் பல புத்தர்கள் மற்றும் போதிசத்துவர்களின் வழிபாடும், புத்தரின் அழியாத்தன்மையும் அதன் அடிப்படை தத்துவத்தினுள் அடங்கும். சில மகாயான பிரிவுகளில், [[மோட்சம்]] ஒரு புத்தர் அல்லது போதிசத்துவரின் மீதுள்ள பக்தியினாலும் நம்பிக்கையினாலும் மட்டுமே எளிதாக அடைந்துவிடலாம். இதனால் சாதாரண மக்களை மகாயான பௌத்தம் வெகுவாகக் கவர்ந்தது, அதன் வளர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம் எனலாம். [[சுகவதி பௌத்தம்|சுகவதி பௌத்தத்தில்]] [[அமிதாப புத்தர்|அமிதாப புத்தரின்]] பெயரை உச்சரிப்பதாலேயே மோட்சம் கிடைத்துவிடுவதாக நம்புகின்றனர். மேலும் மந்திரங்கள் மற்றும் தாரணிகளை உச்சரித்தல், மகாயான சூத்திரங்களைப் படித்தல் முதலிய செயல்களாம் நல்ல கர்மத்தை சம்பாதிக்கலாம் என்பது மகாயனத்தின் ஒரு கருத்து.
 
மகாயான பௌத்தத்தில், ஒரு மகாயான சூத்திரத்தின் மீதும் அதன் கருத்துகள் மீதும் உறுதியாய் இருத்தல் தர்மத்திற்கான ஒரு தலைசிறந்த செயலாகும். மகாயான சூத்திரங்கள் தெய்வீகத்தன்மை உடையதாக நம்பப்படுகின்றன. அதை வாசிப்பதால் ஒருவருடைய தீய கர்மங்கள் விலைவிலகி நல்ல கர்மங்கள் ஒருவருக்கு கிடைக்கின்றது.
 
=== ஆதி கால பௌத்தத்தின் தாக்கம் ===
"https://ta.wikipedia.org/wiki/மகாயான_பௌத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது