கிளவுட் (வீடியோ விளையாட்டு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Cloud (video game)" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

09:14, 11 ஏப்பிரல் 2018 இல் நிலவும் திருத்தம்

கிளவுட் என்பது 2005 இல் தென் கலிஃபோர்னியா பல்கலைக்கழக, ஊடாட ஊடக செயல்நிரல் துறையை சேர்ந்த மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட புதிர் வீடியோ விளையாட்டு. இந்த குழு பல்கலைக்கழகத்திடம் இருந்து 20,000 அமெரிக்க டாலரைப் கொடையாகப் பெற்று 2005 இல் இந்த வீடியோ விளையாட்டினை உருவாக்கத் தொடங்கியது. பின், அதே வருடம் அக்டோபரில் இலவச தரவிறக்கத்திற்காக வெளியிடப்பட்டது. ஜூலை 2006 க்குள், இ இந்த விளையாட்டை வெளியிட்ட இணையத்திற்கு 6 மில்லியன் வருகை வந்தது மற்றும் 600000 முறை இந்த விளையாட்டி தரவிறக்கம் செய்யப்பட்டது.

இந்த விளையாட்டு மருத்துவமனை படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும் போது பறப்பது போன்ற கனவினைக் காணும் ஒரு பையனை மையப் படுத்தி அமைக்கப்பட்டிட்ருக்கிறது. இதன் முன்னனி வடிவமைப்பாளரான ஜேனோவா ஜென்னின் குழந்தைப் பருவத்தை ஒரளவு அடிப்படையாக கொண்டே இது வடிவமைக்கப்பட்டது. இவர் பல நேரங்களில் ஆஸ்த்மாவிற்காக மருத்துவமனையில் அனுமத்திக்கப்பைட்டிருந்தார். அந்த சமயங்களில் அறையில் தனியாக இருக்கும்போது பகல்கனவு காணும் பழக்கம் இவருக்கு இருந்ததாம். விளையாடுபவர்கள் அந்த பையன் ஆக கற்பனை செய்துகொள்ள வேண்டும். கனவு உலகத்தில் உள்ள மேகங்களை கையாண்டு, புதிரைக் கண்டுபிடிப்பதே இந்த விளையாட்டு. வீடியோ விளையாட்டு தொழிற்துறையில் பொதுவாக புறக்கணிக்கப்படும் விளையாடுபவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவது இந்த விளையாட்டின் நோக்கம் ஆகும். 

2006 ஆம் ஆண்டு நடந்த ஸ்லாம்டேன்ஸ் குரில்லா கேம்ஸ் போட்டியில் சிறந்த மாணவர் தத்துவம் விருதினை க்ளவுட் விளையாட்டு பெற்றுச் சென்றது மற்றும் 2006 ஆம் ஆண்டு இண்டிபெண்டட் கேம்ஸ் ஃபெஸ்டிவலில் சிறந்த மாணவர் கண்காட்சி விருதினையும் பெற்றது. இந்த விளையாட்டு காட்சி, இசை, சூழல் போன்றவற்றிற்காக சிறந்த விமர்சனங்களையும் பெற்றது. க்ளவுட் விளையாட்டினை ஒரு வணிக ரீதியான விளையாட்டாக மறு உருவாக்கம் செய்ய எண்ணி சென் மற்றும் தயாரிப்பாளர் கெல்லி சாண்டைகோ இருவரும் இணைந்து தட்கேம்கம்பெனியை உருவாக்கினர்.