செருமேனியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 42:
{{Elementbox_footer | color1=#cccc99 | color2=black }}
 
'''செருமேனியம்''' ''(Germanium)'' என்பது Ge என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுகுறியீடு கொண்ட ஒரு தனிமம் ஆகும். இதனுடைய [[அணு எண்]] 32 மற்றும் [[அணு நிறை]] 72.64 ஆகும்.[[கார்பன் குழுவில்]]<ref>{{cite journal| first = Masanori|last = Kaji |title = D. I. Mendeleev's concept of chemical elements and ''The Principles of Chemistry''|journal=Bulletin for the History of Chemistry|volume=27|issue=1|pages=4–16|date=2002|url=http://www.scs.uiuc.edu/~mainzv/HIST/awards/OPA%20Papers/2005-Kaji.pdf| format=PDF|accessdate = 2008-08-20}}</ref> இடம்பெற்றுள்ள இத்தனிமம் பளபளப்பும் கடினத்தன்மையும் கொண்டது ஆகும். சாம்பல்-வெள்ளை நிறத்தில் ஒரு உலோகப் போலியாக இது காணப்படுகிறது. வேதியல் முறைப்படி இதனை அடுத்துள்ள வெள்ளீயம், சிலிக்கன் ஆகிய தனிமங்களின் பண்புகளை செருமேனியத்தின் பண்புகளும் ஒத்துள்ளது. தூய செருமேனியம் சிலிக்கனைப் போல ஒரு குறைக்கடத்தியாகும். தோற்றத்தில் செருமேனியமும் தனிமநிலை சிலிக்கானைப் போலவே காணப்படுகிறது. அதைப்போலவே செருமேனியமும் இயல்பாகவே செயல்பட்டு இயற்கையில் ஆக்சிசன் கொண்ட அணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது.
 
எப்போதாவது அரிதாக செருமேனியம் அதிக அடர்த்தியுடன் இயற்கையில் தோன்றுகிறது என்பதால் வேதியியல் வரலாற்றில் செருமேனியம் மிகத் தாமதமாகவே கண்டறியப்பட்டுள்ளது எனலாம். புவியின் மேலோட்டில் அதிகமாகக் கிடைக்கும் தனிமங்களின் பட்டியலில் செருமேனியம் 15 ஆவது இடத்தில் இருப்பதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. 1869 ஆம் ஆண்டு திமித்ரி மெண்டலீப் என்பவர் இப்படியொரு தனிமம் புவியில் இருக்கலாம் என முன்கணித்தார். தனிம வரிசை அட்டவணையில் இத்தனிமத்தின் இடத்தையும் ஊகித்த இவர் அதன் அடிப்படையில் சில பண்புகளையும் முன்கணித்தார். எகாசிலிக்கான் என அத்தனிமத்திற்கு ஒரு பெயரையும் சூட்டினார். கிட்டதட்ட இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் 1886 ஆம் ஆண்டு கிளமென்சு விங்களர் என்பவர் வெள்ளி மற்றும் கந்தகம் போன்ற தனிமங்களுடன் சேர்த்து ஒரு புதியதாக ஒரு தனிமத்தைக் கண்டுபிடித்தார். ஆர்கைரோடைட்டு என்ற கனிமத்தில் இத்தனிமங்கள் கிடைத்தன. இப்புதிய தனிமம் பார்ப்பதற்கு தோற்றத்தில் ஆண்டிமனி மற்றும் ஆர்சனிக் போன்ற தனிமங்களைப் போல காணப்பட்டது. செருமேனியம் பிற சேர்மங்களுடன் இணையும் விகிதங்கள் மெண்டலீப் கணித்தபடி சிலிக்கானின் சேர்க்கை விகிதங்கள் காணப்பட்டன. விங்களர் தன்னுடைய நாட்டின் பெயரான செருமனி என்பதைக் குறிக்கும் வகையில் இப்புதிய தனிமத்திற்கு செருமேனியம் என்ற பெயரை வைத்தார். இப்போது துத்தநாகத்தின் முக்கிய தாதுவான இசுபேலரைட்டு என்ற தாது செருமேனியம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. வர்த்தக ரீதியாக ஈயம், வெள்ளி, செப்பு உள்ளிட்ட தாதுக்களிலிருந்தும் செருமேனியம் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/செருமேனியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது