"இலந்தனம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8,508 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎top: பகுப்பு மாற்றம் using AWB)
{{Elementbox_isotopes_end}}
{{Elementbox_footer | color1=#ffbfff | color2=black }}
 
'''இலந்தனம்''' ([[ஆங்கிலம்]]: Lanthanum ([[பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி|IPA]]: {{IPA|/ˈlanθənəm/}}) ஒரு [[வேதியியல்]] [[தனிமம்]]. இது [[தனிம அட்டவணை]]யில் '''La''' என்னும் குறீயீட்டால் குறிக்கப்பெறும். இலந்தனத்தின் [[அணுவெண்]] 57 ஆகும். இதன் [[அணுக்கரு]]வில் 82 [[நொதுமி]]கள் உள்ளன.. பார்ப்பதற்கு வெள்ளிபோல் வெண்மையாக இருக்கும் [[திண்மம்|திண்மப்]] பொருள். தனிம அட்டவணையில் [[நெடுங்குழு 3|மூன்றாவது நெடுங்குழு]]வைச் சேர்ந்த [[காரக்கனிம மாழை]] ஆகும். இது [[இலந்தனைடு]] என்னும் பிறழ்வரிசை மாழைகள் வரிசையைச் சேர்ந்த ஒரு மாழை. இம் மாழை கத்தியால் நறுக்கக்கூடிய அளவுக்கு மென்மையான, வளைந்து நெளியக்கூடிய, தகடாக்கவல்ல மாழை. காற்று படுமாறு வைக்கப்பட்டால் நேரடியாக [[கரிமம்]], [[நைட்ரஜன்]], [[போரான்]], [[செலீனியம்]], [[சிலிக்கான்]], [[பாஸ்பரஸ்]], [[கந்தகம்]], மற்றும் [[ஹாலஜன்]]களுடன் விரைந்து வேதியியல் இயைபு கொள்கின்றது. குளிர்ந்த நீர் (தண்ணீர்) இலந்தனத்துடன் மெள்ளவே இயைகின்றது, ஆனால் வென்னீர் (சுடுநீர்) விரைந்து இலந்தனைத்தைத் தாக்குகின்றது (வினையுறுகின்றது).
'''இலந்தனம்''' ''(Lanthanum)'' என்பது La என்னும் குறீயீட்டால் குறிக்கப்பெறும் ஒரு [[வேதியியல்]] [[தனிமம்]] ஆகும். இலந்தனத்தின் [[அணு எண்]] 57 ஆகும். இதன் [[அணுக்கரு]]வில் 82 [[நியூட்ரான்கள்]] உள்ளன. இலந்தனம் பார்ப்பதற்கு[[ வெள்ளி]]போல் வெண்மையாக இருக்கும் ஒரு [[திண்மம்|திண்மப்]] பொருள் ஆகும். [[காற்று|காற்றில்]] பட நேர்ந்தால் இது மங்கலாக மாறுகிறது. இலந்தனத்தை கம்பியாக நீட்டலாம். கத்தியால் வெட்டலாம். இலந்தனத்துடன் நெருங்கிய ஒற்றுமை கொண்டிருப்பதால் [[சீரியம்]] தொடங்கி [[லித்துவேத்தியம்]] வரையுள்ள பதினான்கு தனிமங்களும் இலாந்தனைடுகள் எனப்படுகின்றன. இப்பதினான்கு தனிமங்களும் ஒத்த [[வேதியியல்]] மற்றும் [[இயற்பியல்]] பண்புகளைக் கொண்டுள்ளன. இலாந்தனைடுகளுடன் இலந்தனம் சேர்க்கப்படுவது குறித்து ஐயப்பாடுகள் நிலவுகின்றன. இலாந்தனைடு தொடர்வரிசை சேர்மங்களுக்கு இலந்தனம் முதலாவது தனிமமாகவும் முன்னோடித் தனிமமாகவும் அமைந்து ஒப்புமைக்காக ஓர் [[ஆகுபெயர்]] ஆகிறது. சில சமயங்களில் இலந்தனம் ஆறாவது தொடரின் முதல் தனிமமாகக் கருதப்பட்டு இடைநிலை உலோகங்களுடன் சேர்க்கப்படுவதுண்டு. பாரம்பரியமாக இலந்தனத்தை அருமண் உலோகங்கள் என வகைப்படுத்துகின்றனர். வழக்கமாக இது சேர்மங்களில் +3. என்ற [[ஆக்சிசனேற்ற நிலை]]யில் உள்ளது. மனிதர்களின் உடலில் இலந்தனத்தின் உயிரியற் செயற்பாடுகள் ஏதுமில்லை என்றாலும் சில வகை [[பாக்டீரியா]]க்களுக்கு இது அத்தியாவசிய வேதிப்பொருளாகிறது. இலந்தனம் நச்சுத்தன்மை எதையும் வெளிப்படுத்துவதில்லை என்றாலும் கூட சில நுண்ணுயிர் எதிர்ப்பு நடவடிக்கைகளை வெளிப்படுத்துகிறது.
 
இலந்தனம் வழக்கமாக சீரியம் மற்றும் பிற அருமண் தனிமங்களுடன் இணைந்து தோன்றுகின்றது. சுவீடிய வேதியியலாளர் கார்ல் குசுதாவ் மொசாண்டர் 1839 ஆம் ஆண்டு முதன்முதலில் இலந்தனத்தைக் கண்டறிந்தார். சிரியம் நைட்ரெட்டில் ஒரு மாசுப்பொருளாக இது கலந்திருந்தது. இதனால் இதற்கு இலந்தனம் என்ற பெயர் வந்ததாக குறிப்பிடப்படுகிறது. பண்டைய கிரேக்க மொழியில் லாந்தனின் என்றால் மறைந்திருக்கும் பொருள் என்பது பொருளாகும். புவி மேலோட்டில் அதிகமாகக் கிடைக்கும் தனிமங்களில் இலந்தனம் 28 ஆவது இடத்தைப் பிடிக்கிறது. கிடைக்கும் இலந்தனத்தின் அளவு கிட்டத்தட்ட ஈயத்தைவிட மூன்று மடங்கு அதிகமாகும். மோனசைட்டு, பாசுட்னசைட்டு போன்ற கனிமங்களில் நான்கில் ஒரு பாகம் இலந்தனம் கலந்துள்ளது <ref>
{{cite web |url=http://webmineral.com/data/Monazite-(Ce).shtml |title=Monazite-(Ce) Mineral Data |website=Webmineral |access-date=10 July 2016}}</ref>. இவ்விரு கனிமங்களில் இருந்து சிக்கலான செயல்முறையின் மூலம் இலந்தனம் பிரித்தெடுக்கப்படுகிறது. 1923 ஆம் ஆண்டு வரை தூய இலந்தனம் தனிமைப்படுத்தப்பட்டு பிரித்தெடுக்கப்படவில்லை.
 
இலந்தனம் சேர்மங்கள் பல பயன்பாடுகளைக் கொண்டவையாக உள்ளன. வினையூக்கியாக, கார்பன் மின்பொறி விளக்குகளாக, கண்ணாடிகளில் சேர்க்கும் உபபொருளாக, பற்றவைப்பான்கள் மற்றும் தீப்பந்தங்களில் தீப்பற்றும் பொருளாக, எலக்ட்ரன் நேர்மின்வாயாக, மினுமினுப்பாக்கியாக என்று பலவாறாக இவை பயன்படுகின்றன. சிறுநீரக பாதிப்பு சிகிச்சையில் இலந்தனம் கார்பனேட்டு பாசுப்பேட்டு பிணைப்பியாகப் பயன்படுத்தப்படுகிறது.
== பண்புகள் ==
=== இயற்பியல் பண்புகள் ===
லாந்தனைடுகள் தொடர் வரிசைச் சேர்மங்களுக்கு இலந்தனம் ஒரு முன்னோடிச் சேர்மமாகவும் முதலாவது தனிமமாகவும் விளங்குகிறது. தனிம வரிசை அட்டவணையில் காரமண் உலோகமான [[பேரியம்|பேரியத்திற்கு]] வலது புறத்திலும். லாந்தனைடான சீரியத்திற்கு வலதுபுறத்திலும் இலந்தனம் தோன்றுகிறது. [[இசுக்காண்டியம்]], [[இட்ரியம்]], போன்ற இலேசான இணைத் தனிமங்களுடனும், [[ஆக்டினியம்]] என்ற இணை கன உலோகத்துடனும் சேர்த்து 3 ஆவது குழு தனிமமாக இலந்தனம் பார்க்கப்படுகிறது <ref name=Greenwood1102>Greenwood and Earnshaw, p. 1102</ref>. இருப்பினும் இந்த வகைப்பாடும் சர்ச்சைக்கு உரியதாக உள்ளது. இசுக்காண்டியம், இட்ரியம், ஆக்டினியம் தனிமங்கள் போலவே இலந்தனத்திலும் 57 எலக்ட்ரான்கள் [Xe]5d16s2 என்ற எலக்ட்ரான் ஒழுங்கமைவில் வெளிக்கூட்டில் மூன்று இணைதிறன் எலக்ட்ரான்களுடன் அடுக்கப்பட்டுள்ளன. வேதிவினைகளில் இலந்தனம் 5d மற்றும் 6s துணைக்கூடுகளில் இருக்கும் இம்மூன்று எலக்ட்ரான்களையும் கொடுத்து +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையாக உருவாகிறது. மந்தவாயு செனானின் நிலையான எலட்ரான் ஒழுங்கை அடைகிறது. சில இலந்தனம்(II) சேர்மங்கள் அறியப்படுகின்றன<ref name=Greenwood1106>Greenwood and Earnshaw, p. 1106</ref>. ஆனால் அவை சிறிதளவே நிலைப்புத் தன்மையைக் கொண்டுள்ளன<ref name=patnaik>{{cite book | last =Patnaik | first =Pradyot | date = 2003 | title =Handbook of Inorganic Chemical Compounds | publisher = McGraw-Hill | pages = 444–446| isbn =0-07-049439-8 | url= {{Google books |plainurl=yes |id=Xqj-TTzkvTEC |page=243 }} | accessdate = 2009-06-06}}</ref>.
 
லாந்தனைடுகளில் இலந்தனத்தின் எலக்ட்ரான் ஒழுங்கமைவு ஒரு விதிவிலக்காக உள்ளது. ஏனெனில் இதில் 4f எலக்ட்ரான்கள் கிடையாது. லாந்தனைடு வேதியியலில் இந்த 4f எலக்ட்ரான்களின் ஆற்றல் முக்கியத்துவம் பெற்றதாகும். எனவே லாந்தனைடுகள் சீரியத்தில் இருந்து தொடங்குகின்றன.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
 
 
{{இலந்தனம் சேர்மங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2509871" இருந்து மீள்விக்கப்பட்டது