"சிவகாமியின் சபதம் (புதினம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: காட்சி திருத்தம் கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
காலம் உருண்டோடி ஒன்பது ஆண்டுகள் கடந்தன. புலிகேசியுடன் ஏற்பட்ட போரினால் காயமுற்று மரணபடுக்கையில் இருந்த மாமன்னர் மகேந்திர பல்லவர் அதிலிருத்து மீளாமலேயே வீரமரணமெய்தினார். தந்தைக்குப் பின் முடிசூடிய நரசிம்மவர்மர், பாண்டிய இளவரசி வானமாதேவியை மனம்புரிந்திருந்தார். ஆனால் வாதாபியை நோக்கி படைஎடுப்பதில் அவரது முனைப்பு சிறிதும் குறையாமல் இருந்தது. இதற்கிடையே புலிகேசிக்கும், நாகநந்திக்கும் இடையேயான கருத்துவேறுபாடுகள் அதிகரித்து இருந்தது. தான் நாட்டை துறந்து, பதவியாசையை விட்டு துறவறம் புரிந்தது தவறென்று எண்ணினான். இதன் பொருட்டு பல்லவர்கள் படையெடுப்பை பற்றி தெரிந்தும் அவன் அதைக் கூறாமல் மறைத்தான். இவனது எல்லா மனக்குலப்பத்திர்க்கும், சிவகாமி அவனை மணப்பதற்கு சம்மதிக்காமையே காரணமாகும்.
 
புலிகேசி அஜந்தாவில் நடைபெறும் கலாசார விழாவிற்கு சென்றிருந்த வேளையில் பல்லவர் படை வாதாபிக் கோட்டையை சூழ்ந்தது. இதை சற்றும் எதிர்காணா வாதாபி பல்லவரிடம் பணிய முனைந்தது. இதற்கிடைய விபரமறிந்து விரைந்து வந்த புலிகேசியின் படையுடன் கோட்டைக்கு அப்பால் போர்நடந்தது. இதில் மன்னன் புலிகேசி கொல்லப்பட்டான். யாரும் இதை அறியும் முன்பாக நாகநந்தி தன் சகோதரனின் உடலை எடுத்துச்சென்று அதனை சிதையிலிட்டான். பின்பு சுரங்கப் பாதை மூலம் நகரினுள் வந்த நாகநந்தி புலிகேசிபோல் வேடமிட்டு பொற்காலம்போர்க்களம் வந்தான். முன்னர் அறிவித்த அடிபணியும் அறிவிப்பையும் நீக்கினான். இதனால் கோபமுற்ற நரசிம்ம பல்லவர் வாதாபியை தீக்கிரையாக்க கட்டளையிட்டார்.
 
இக்கதையின் முடிவாக ஒருகை இழந்த நாகநந்தி பரஞ்சோதியாரால் புத்த துறவி என்ற காரணத்தினால் உயிருடன் விடப்பட்டான். போரினால் தான் பாவம் செய்ததாக நினைத்த பரஞ்சோதியார் பின் சைவதுறவியாக மாறினார். நாடு திரும்பிய சிவகாமி தன் காதலன் இன்னொருப் பெண்ணின் கணவரென்பதையறிந்து தன் கனவு சிதைந்ததைஎண்ணி மனத்தால் இறந்தாள். பின் தன் பரதக் கலைக்கே தன்னை அர்ப்பணிக்கும் விதமாக காஞ்சி ஏகாம்பரேஸ்வரருக்கே திருமாங்கல்யம் கட்டிக் கொண்டாள். இக்காட்சியுடன் இக்கதை முடிவடைகிறது.
57

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2510065" இருந்து மீள்விக்கப்பட்டது