முத்தையா முரளிதரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரை விரிவாக்கம்
கட்டுரை விரிவாக்கம்
வரிசை 100:
'''முத்தையா முரளிதரன்''' (''Muttiah Muralitharan'', பிறப்பு: [[ஏப்ரல் 17]], [[1972]], [[கண்டி]]) பொதுவாக '''முரளி''' என்றும் அழைக்கப்படுகிறார். [[இலங்கை]]யின் [[இந்தியத் தமிழர் (இலங்கை)|மலையகத் தமிழரான]] இவர் [[இலங்கைத் துடுப்பாட்ட அணி]]யின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். [[2002]] ஆம் ஆண்டில் [[விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு|விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பானது]] இவரை [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்ட]] வரலாற்றில் மிகச்சிறந்த பந்து வீச்சாளர் எனக் குறிப்பிடுகிறது.
 
[[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வு துடுப்பாட்டப்]] போட்டிகளில் விளையாடி 800 இலக்குகளை (விக்கெட்டுகளை) வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். <ref>{{cite web| url=http://content-usa.cricinfo.com/slveng/content/current/story/323457.html| title=ஷேன் வோர்னின் இலக்கை முரளி தாண்டினார்}}</ref> சூலை 22, 2010 இல் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட]]த்திலும், [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்திலும்]] அதிக இலக்குகளை வீழ்த்தியவர் என்ற ச்சதையைசாதனையைப் படைத்துள்ளார். [[இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்|இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின்]] துடுப்பாட்ட காட்சியகத்தில் இடம்பிடித்த ஒரே [[இலங்கைத் துடுப்பாட்ட அணி]] வீரர் ஆவார்.<ref>{{Cite news|url=http://www.espncricinfo.com/ci-icc/content/story/1039767.html|title=Muralitharan first Sri Lankan in ICC Hall of Fame|work=ICC Cricket|date=27 July 2016|accessdate=27 July 2016}}</ref> [[தெரன தொலைக்காட்சி]] வழங்கும் 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த இலங்கை வீரர் விருதினைப் பெற்றார்.<ref>http://www.adaderana.lk/news.php?nid=43262</ref>
 
[[பெப்ரவரி 5]], [[2009]] இல் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிராக விளையாடிய போது [[கவுதம் கம்பீர்|கவுதம் கம்பீரை]] வீழ்த்திய போது [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின்]] முன்னாள் வீரரான [[வசீம் அக்ரம்|வசீம் அக்ரமின்]] சாதனையான [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியில் 502 இலக்குகள் எனும் சாதனையை முரளிதரன் முறியடித்தார்.<ref name="ODI bowling record">{{Cite news|url=http://news.bbc.co.uk/sport1/hi/cricket/7872333.stm|title=Murali breaks ODI wicket record|work=BBC Sport|date=5 February 2009|accessdate=7 February 2009|location=London}}</ref> [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் அதிக இலக்குகளைப் பெற்ற [[ஷேன் வோர்ன்]] சாதனையை [[டிசம்பர் 3]], ,2007 இல் முறியடித்தார்.<ref name="Cricinfo record story">{{Cite news|url=http://content-usa.cricinfo.com/slveng/content/current/story/323457.html|title=Murali breaks Warne's record|work=[[Cricinfo]]|date=3 December 2007|accessdate=3 December 2007}}</ref><ref name="Muralitharan breaks the cricket test wicket record">{{Cite news|url=https://www.youtube.com/watch?v=XrniGZnLxZI|title=Muralitharan breaks the cricket test wicket record|publisher=YouTube|date=3 December 2007|accessdate=18 March 2008}}</ref>
 
சராசரியாக ஒரு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் ஆறு இலக்குகளைப் பெற்றுள்ளார். தலைசிறந்த [[பந்து வீச்சாளர்|பந்து வீச்சாளர்களில்]] ஒருவராகக் கருதப்படுகிறார்<ref name="Profile Cricinfo">{{Cite news|url=http://content-aus.cricinfo.com/srilanka/content/player/49636.html|title=Muttiah Muralitharan profile at Cricinfo|first=Charlie|last=Austin|accessdate=6 February 2008}}</ref>.[[இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்|இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின்]] சிறந்த பந்துவீச்சாளர்களின் தரப்பட்டியலில் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்தின்]] சிறந்த பந்துவீச்சாளராக 1,711 நாட்கள் முதல் இடத்தில் நீடித்தார். <ref>{{cite web|url=http://tribune.com.pk/story/30545/murali-retires-in-third-position/|title=Murali retires in third position – The Express Tribune|publisher=Tribune.com.pk|accessdate=1 April 2011}}</ref>
 
இவரின் துடுப்பாட்டக் காலங்களில் பல சர்ச்சையான நிகழ்வுகள் நடந்துள்ளன. இவரின் அதிநீட்டம் பந்து வீசும் முறையானது [[நடுவர் (துடுப்பாட்டம்)|நடுவர்களாலும் (துடுப்பாட்டம்)]] துடுப்பாட்ட வாரியங்களினாலும் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்பட்டன.<ref name="Gillespie comments">{{Cite news|url=http://www.theaustralian.news.com.au/story/0,25197,22577477-5001505,00.html|title=Bending law aided Murali: Gillespie|first=Malcolm|last=Conn|work=The Australian|date=13 October 2007|accessdate=14 December 2007}}</ref> பின் பலபரிசோதனைகளுக்குப் பிறகு [[1996]] மற்றும் [[1999]] ஆகிய ஆண்டுகளில் [[இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்]] இவரின் பந்து வீச்சு முறை சரியாக உள்ளதாகத் தெரிவித்து விளையாட அனுமதித்தது. <ref name="Profile Cricinfo2">{{Cite news|url=http://content-aus.cricinfo.com/srilanka/content/player/49636.html|title=Muttiah Muralitharan profile at Cricinfo|first=Charlie|last=Austin|accessdate=6 February 2008}}</ref>
 
[[பெப்ரவரி 2009]] இல் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]], [[தேர்வுத் துடுப்பாட்டம்]] ஆகிய இரண்டு துடுப்பாட்ட வடிவங்களையும் சேர்த்து அதிக இலக்குகளை வீழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்தார். [[2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை|2011 துடுப்பாட்ட உலகக்கோப்பையின்]] போது தனது ஓய்வினைப் பற்றி அறிவித்தார். அப்போது தான் மனதளவிலும் , உடல் அளவிலும் தகுதியுடன் இருப்பதாகவும், துடுப்பாட்டப் போட்டிகளை மகிழ்ச்சியுடன் விளையாடியதாகவும் இன்னும் விளையாடவேண்டும் போல இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனாலும் இந்த உலகக் கோப்பைப் போட்டியின் போதே [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில்]] இருந்து தான் ஓய்வு பெற விரும்புவதாகத் தெரிவித்தார்.<ref>{{Cite news|url=http://www.hindu.com/2009/02/07/stories/2009020762132000.htm|title=Murali wants to play till 2011 World Cup|work=The Hindu|date=10 November 2004|accessdate=9 February 2009|location=Chennai, India}}</ref> [[சூலை 18]], [[2010]] இல் [[காலி|காலியில்]] நடைபெற்ற [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான முதல் போட்டியின் இறுதி நாளில் தனது ஓய்வினை அறிவித்தார்.<ref>{{cite web|author=From correspondents in Colombo, Sri Lanka|url=http://www.foxsports.com.au/story/0,8659,27373216-23212,00.html|title=Muralitharan to retire from Tests &#124; Cricket|publisher=Fox Sports|date=6 July 2010|accessdate=1 April 2011}}</ref> அந்தப் போட்டியின் போது 8 இலக்குகளை வீழ்த்தினார். [[பிரக்யான் ஓஜா|பிரக்யான் ஓஜாவினை]] வீழ்த்திய பிறகு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்தில்]] 800 இலக்குகளை வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்தார்.<ref name="zeenews">{{cite web|url=http://cricket.zeenews.com/IndiavsLanka/story.aspx?nid=31019|title=Murali first man on earth to scale Mount-800|publisher=Zeenews.com|date=22 July 2010|accessdate=22 July 2010|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20100725181308/http://cricket.zeenews.com/IndiavsLanka/story.aspx?nid=31019|archivedate=25 July 2010|df=dmy-all}}</ref><ref name="Final wicket">{{cite web|url=https://www.youtube.com/watch?v=mRwDQpXLdWU|title=Muttiah Muralitharan's 800th wicket of his final Test match|publisher=YouTube|date=22 July 2010|accessdate=11 August 2012}}</ref>
 
[[2004]] ஆம் ஆண்டு [[ஐக்கிய நாடுகள்|ஐக்கிய நாடுகளின்]] [[உலக உணவுத் திட்டம்|உலக உணவுத் திட்டத்தின்]] தூதுவராக இணைந்ததோடு வறுமை-எதிர்ப்பு திட்டமொன்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் இருந்து 20 நிமிடங்களில் உயிர் தப்பிய முரளிதரன் பின்னர் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார். <ref>[http://www.cricinfo.com/link_to_database/ARCHIVE/CRICKET_NEWS/2005/JAN/147001_SL_03JAN2005.html]</ref>.
"https://ta.wikipedia.org/wiki/முத்தையா_முரளிதரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது