64 இருமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
செயலியின் பதிவகங்கள் பல குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன, அவை ''முழுவெண் வகை'', ''தெப்பப் புள்ளிவகை'', ''ஒற்றைக் கட்டளை, பன்முகத் தரவுவகை'' (SIMD), ''கட்டுப்பாட்டுவகை'', முகவரிக்கும் எண்களுக்குமான சிறப்புவகைப் பதிவகங்கள் என்பனவாகும். பின்னர் கூறிய சிறப்புப் பதிவகங்கள் பலவகை பயன்களையும் பெயர்களையும் கொண்டுள்ளன. இவை ''முகவரி'', ''சுட்டி'', அல்லது ''அடிப்படைப் பதிவகங்கள்'' என வழங்கப்படலாம். என்றாலும், அண்மை வடிவமைப்புகளில், இந்தச் செயல்கள் அடிக்கடி மிகப் பொது நொக்க்க முழுவெண் பதிவகங்களால் நிகழ்த்தப்படுகின்றன. பெரும்பாலான செயலிகளில், முழுவெண், முகவரி பதிவகங்கள் மட்டுமே நினைவகத் தரவுகளை அழைக்க பயன்படுகின்றன; மற்ரவகைப் பதிவகங்களால் இது முடியாது. எனவே, இவ்வகைப் பதிவகங்களின் அளவு இயல்பாக நேரடியாக அழைக்கமுடிந்த நினைவக அளவை, அகன்ற தெப்பப் புள்ளி பதிவகங்கள் இருந்தாலும் வரம்புபடுத்துகின்றன.
 
பெரும்பாலான உயர்திறமுள்ள 32 இரும, 64 இருமச் செயலிகளும் ( இதற்குச் சில குறிப்பிட தக்க விதிவிலக்குகளாக பழைய அல்லது உட்பொதிந்த ARM கட்டமைப்பு (ARM), 32 இரும MIPS கட்டமைப்பு (MIPS) மையச் செயலிகள் அமைகின்றன.) ஒருங்கிணைந்த தெப்பப் புள்ளி வன்கலங்களையே பெற்றுள்ளன; இவை அடிக்கடி, ஆனால் எப்போதும் அல்ல, 64 இருமத் தரவு அலகுகளைச் சார்ந்துள்ளன. எடுத்துகாட்டாக, [[x86]]/[[x87]] கட்டமைப்பு 64 இரும, 32 இருமத் தெப்பப் புள்ளிமதிப்புகளை ஏற்றுத் தேக்கும் கட்டளைகளை நினைவகத்தில் பெற்றிருந்தாலும், இவற்றின் அகத் தெப்பப் புள்ளி தரவும் பதிவகமும் 80 இரும அகலப் படிவத்தில் அமைந்துள்ளன; ஆனால், பொதுநோக்கப் பதிவகங்களின் அளவோ 32 இரும அகலங் கொண்டதே. மாறாக, 64 இரும DEC ஆல்பா குடும்பம் 64 இருமத் தரவு, பதிவகப் படிவத்தையும் 64 இரும முழுவெண் பதிவகங்களையும் பயன்படுத்துகின்றன.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/64_இருமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது