தியான் சந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆரம்பகால வாழ்க்கை
பிழை திருத்தம், அணித் தலைவராக
வரிசை 57:
==பாரத் ரத்னா ==
இந்தியாவின் உயரிய குடியுரிமை விருதான [[பாரத் ரத்னா]] விருது 2014 வரை விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்படவில்லை. [[உள்துறை அமைச்சகம் (இந்தியா)]] விதிகளை மாற்றியமைத்து விளையாட்டு வீரர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க முடிவு செய்யுமானால் முதல் விருது தியான் சந்த்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது <ref>[http://ibnlive.in.com/news/dhyan-chand-deserves-bharat-ratna-rajpal/223577-5-136.html Dhyan Chand deserves Bharat Ratna: Rajpal] ஐபிஎன்லைவ் இணையத்தளம், பார்க்கப்பட்ட நாள்:சனவரி 23, 2012</ref>. இதனிடையே [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேச அரசு]] அவர் நினைவாக [[அருங்காட்சியகம்]] ஒன்றினைத் திறக்க முடிவு செய்துள்ளது.<ref>[http://archive.is/20120722041121/timesofindia.indiatimes.com/sports/hockey/Madhya-Pradesh-to-set-up-museum-after-Dhyan-Chand/articleshow/11617568.cms Madhya Pradesh to set up museum after Dhyan Chand] டைம்ஸ் ஆஃப் இந்தியா, பார்க்கப்பட்ட நாள்:சனவரி 24, 2012</ref>
 
== அணித் தலைவராக ==
[[1933]] ஆம் ஆண்டில் தியான் சந்த் தனது உள்ளூர் அணியான ஜான்சி ஹே ஹீரோஸ் அணித்தலைவராக பெய்டன் கோப்பைப் போட்டியில் வென்றதையே மிகச் சிறப்பான போட்டி என்று கூறுகிறார். இதனைப் பற்றி இவர் பின்வருமாறு கூறுகிறார்.
 
என்னிடம் யாராவது இதுவரை தாங்கள் விளையாடியதிலேயே மிகச் சிறப்பான போட்டி எது? எனக் கேட்டால் நான் சிறிதும் தயங்காமல் 1933 ஆம் ஆண்டில் விளையாடிய பெய்டன் கோப்பைக்கான போட்டியில் கல்கத்தா அணிக்கு எதிராக விளையாடியதைத் தான் கூறுவேன். ஏனெனில் அன்றைய சமயத்தில் கல்கத்தா கஸ்டம்ஸ் அணி மிக பலம் வாயந்த அணியாகக் கருதப்பட்டது. அவர்களின் அணியில் சௌகத் அலி, அசாத் அலி, சீமன், மோசின் போன்ற வீரர்கள் இருந்தனர்.
 
எங்களது அணியில், எனது சகோதரன் ரூப்சிங் மற்றும் இசுமாயில் ஆகியோர் [[மும்பை]] இரயில்வே அணியில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள் . இவர்களைத் தவிர எங்கள் அணியில் இருந்த மற்றவர்கள் புது முக வீரர்களாக இருந்தனர்.ஆனால் அவர்கள் செய் அல்லது செத்து மடி எனும் எண்னம் கொண்டவர்களாக இருந்தனர். இரு அணி வீரர்களும் இலக்குகளைப் பெற கடுமையாகப் போராடினோம். இறுதியில் பந்தை நான் இசுமாயிலுக்கு கடத்தினேன். கல்கத்தா கஸ்டம்ஸ் அணியில் நிலவிய புரிதலின்மையினைப் பயன்படுத்தி இசுமாயில் அதனை இலக்காக மாற்றினார். அந்த போட்டியில் அந்த ஒரு இலக்கு மட்டுமே அடிக்கப்பட்டு நாங்கள் சிறப்பான வெற்றியைப் பெற்றோம் எனக் கூறினார்.
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/தியான்_சந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது