கேசினோ ராயல் (2006 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Casino Royale (2006 film)" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:33, 18 ஏப்பிரல் 2018 இல் நிலவும் திருத்தம்

கேசினோ ராயல் (Casino Royale) என்பது 2006 ஆண்டைய பிரித்தானிய உளவளி படம் ஆகும், இது எயான் புரொடக்சன்சின் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத் தொடரில் இருபத்தொன்பதாவது படமாகும். மேலும் அதே பெயரில் இயன் பிளெமிங் 1953 ஆண்டு எழுதிய புதினத்தை தழுவி எடுக்கப்பட்ட மூன்றாவது படமாகும். படத்தை மார்டின் கேம்பல் இயக்க,  நீல் பர்விஸ் & ராபர்ட் வேட் மற்றும் பால் ஹாக்கிஸ் ஆகியோர் எழுத்துப் பணிகளை செய்துள்ளனர். MI6 ஏஜெண்ட் ஜேம்ஸ் பாண்ட் என்ற கதாப்பாத்திரத்தில் டேனியல் கிரெய்க் நடித்த முதல் படம் இது. படத்தை மெட்ரோ-கோல்ட்வைன்-மேயர் மற்றும் கொலம்பியா பிக்சர்ஸ் ஆகியவற்றுக்காக எயான் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்தது. மேலும் இது இரண்டு ஸ்டுடியோக்களுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட முதல் எயான் புரொடக்சன்சால் தயாரிக்கப்பட்ட பாண்ட் திரைப்படமாகும். டை அனதர் டே வைத் தொடர்ந்து, எயான் புரொடக்சன்ஸ் ஜேம்ஸபாண்ட் தொடர் படத்தை மீண்டும் துவக்க முடிவு செய்தது,[1][2][3]


ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் நடிக்க பியர்ஸ் ப்ரோஸ்னானுக்கு அடுத்து நடிக்க ஒரு புதிய நடிகருக்காக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது; இந்தப் பாத்திரத்துக்காக 2005 இல் கிரேக் தேர்வு செய்யப்பட்டது கணிசமான சர்ச்சையைத் தோற்றுவித்தது. திரைப்படத்திற்கான படப்பிடிப்பானது செக் குடியரசு, பகாமாசு, இத்தாலி, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளிலும் பார்ரண்டோவ் ஸ்டுடியோஸ் மற்றும் பைன்வுட் ஸ்டுடியோ போன்ற படப்பிடிப்பு அரங்குகளில் அமைக்கப்பட்ட சோடனைகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்தது.

கேசினோ ராயல் 2006 நவம்பர் 14 அன்று ஓடியோன் லெய்செஸ்டர் சதுக்கத்தில் திரையிடப்பட்டது. படத்துக்கு பெருமளவில் நேர்மறையான விமர்சம் கிடைத்தது.[4]   இது கிட்டத்தட்ட $ 600 மில்லியன் தொகையை ஈட்டியது, 2012 இல் ஸ்கைஃபால் படத்தின் வெளியீடு வரை அதிகபட்சமாக வசூலித்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமாக இருந்தது.

References

  1. Robey, Tim (12 January 2011). "Sam Mendes may have problems directing new James Bond movie". The Daily Telegraph (London). https://www.telegraph.co.uk/culture/film/jamesbond/8255072/Sam-Mendes-may-have-problems-directing-new-Bond-movie.html. 
  2. "IGN: Interview: Campbell on Casino Royale". IGN.com. IGN Entertainment, Inc. 19 October 2005. பார்க்கப்பட்ட நாள் 22 March 2007.
  3. "New James Bond Proves Worthy of Double-0 Status". Space.com. 21 October 2006. பார்க்கப்பட்ட நாள் 16 June 2007.
  4. Casino Royale (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2017-11-21 {{citation}}: More than one of |accessdate= and |access-date= specified (help)