"தமிழ்ப் புத்தாண்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

490 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
சான்று சேர்ப்பு
சி (சான்று சேர்ப்பு)
தமிழரிடையே புத்தாண்டு என்ற பண்டிகை வழக்கில் இருந்ததற்கான பழைய சான்றுகளைப் பெற்றுக்கொள்ளமுடியவில்லை. கார்காலத்தின் ஆரம்பமான ஆவணியை ஆண்டுத்தொடக்கமாக தமிழர்கள் கொண்டிருக்கக் கூடும் என்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்குப் பிந்திய நிகண்டுகளில், ஆவணியே முதல் மாதம் என்ற குறிப்பைக் காணமுடிகின்றது. பொ.பி பதினான்காம் நூற்றாண்டில் தொல்காப்பியத்துக்கு உரைவகுக்கும் [[நச்சினார்க்கினியர்|நச்சினார்க்கினியரும்]] ஆவணியே முதல் மாதம் என்கின்றார்.<ref name = uvangal>{{cite web | url=http://www.uvangal.com/Home/getPostView/1281 | title=தமிழ் வானியலும் புத்தாண்டும் – ஒரு அலசல் | publisher=உவங்கள் இணைய இதழ் | accessdate=27 ஏப்ரல் 2017}}</ref> ஆவணி முதல் மாதம் என்பது கணிப்பில் பயன்பட்டாலும், அதன் போது புத்தாண்டு என்று பண்டிகை கொண்டாடப்பட்டதா என்பது தொடர்பாக போதிய சான்றுகள் கிடைக்கவில்லை.
 
தமிழ் நாட்காட்டி [[இராசிச் சக்கரம்|இராசிச் சக்கரத்தை]] காலக்கணிப்பில் பயன்படுத்தும் ஒரு [[சூரிய நாட்காட்டி]] என்பதால், பன்னிரு இராசிகளில் முதல் இராசியான [[மேழம் (இராசி)|மேழத்தில்]] சூரியன் நுழையும் சித்திரையே முதல் மாதமாகக் கருதப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.<ref>[http://www.tamilpaper.net/?p=5786 தமிழ்ப்புத்தாண்டு சர்ச்சைகள்: வானியலும் ஜோதிடமும், தமிழ்பேப்பர் கட்டுரை]</ref> சங்க இலக்கியமான [[நெடுநல்வாடை]]யில் மேழமே முதல் இராசி{{cn}} என்ற குறிப்பு<ref>{{cite web | url=http://ilakkiyam.com/iyal/1563-nedunalvadai | title=நெடுநல்வாடை | accessdate=19 ஏப்ரல் 2018 | author=மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனார்|quote="திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து" வரி 160-161}}</ref> காணப்படுவதால், அதை மேலதிக சான்றாகக் கொள்வர். எனினும், பத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய ''அகத்தியர் பன்னீராயிரம்'', பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ''புட்பவிதி''<ref>[http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF புட்பவிதி மின்னூல்]</ref> முதலான நூல்களே தெளிவாக சித்திரை முதல் மாதம் என்று சொல்கின்றன. பங்குனியின் இறுதிநாட்களில் அல்லது சித்திரை முதல் நாளில் தான் வழக்கமாக வேங்கை மரம் பூக்கும். மலைபடுகடாம் "தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை" என்றும், பழமொழி நானூறு "கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்" என்றும் பாடுவதால் இளவேனில் துவக்கமான சித்திரையே அக்காலத்தில் தலைநாளாக மிளிர்ந்தது என்றும் சொல்கிறார்கள்.<ref>{{cite web | url=http://www.vsrc.in/index.php/articles/2014-07-30-08-44-16/item/302-2013-04-21-16-23-06 | title=தொடராண்டா பிரச்சனை? | publisher=Vedic Science Research Centre | date=21 ஏப்ரல் 2013 | accessdate=13 ஏப்ரல் 2018 | author=பால. கௌதமன்}}</ref>
 
இலங்கையில் தமிழரும் சிங்களவரும் சித்திரை ஒன்றையே புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள்.பொ.பி 1310இல் இலங்கையை ஆண்ட [[தம்பதெனிய அரசு|தம்பதெனியா]] மன்னன் மூன்றாம் பராக்கிரமபாகுவின் அரசகுருவான தேனுவரைப்பெருமாள் எழுதிய "[[சரசோதி மாலை]]" எனும் நூலில் வருடப்பிறப்பின் போது செய்யவேண்டிய சடங்குகள் விவரிக்கப்பட்டுள்ளன.<ref>{{cite book | url=http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88 | title=போசராச பண்டிதர் இயற்றிய சரசோதிமாலை | author=எப்.எக்ஸ்.சி.நடராசா | year=1988 | location=யாழ்ப்பாணம் | pages=75-76}}</ref> மேலும், இலங்கையின் [[திருக்கோணேச்சரம்]], 1622ஆமாண்டு சித்திரை மாதம், தமிழர் புத்தாண்டு அன்று கொள்ளையிடப்பட்டதாக [[போர்த்துக்கீசர்]] குறிப்புகள் சொல்வதையும் நாம் ஊன்றி நோக்கலாம்.<ref>{{cite journal | url=http://archives.dailynews.lk/2001/pix/PrintPage.asp?REF=/2013/04/04/fea23.asp | title=Trincomalee -- timeless: Thiru Koneswaram Temple | author=Chelvatamby Maniccavasagar | journal=dailynews.lk | year=2013 | month=4}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2511676" இருந்து மீள்விக்கப்பட்டது