உயிரே உயிரே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''உயிரே உயிரே''' ('''''Uyire Uyire''''') என்பது தமிழ் [[காதல் திரைப்படம்]] ஆகும். இப்படத்தை ஏ. ராஜசேகர் இயக்கியுள்ளார். படமானது முத்த நடிகை [[ஜெயபிரதா]] மற்றும் முன்னாள்  அரசியல்வாதி [[அமர் சிங் (அரசியல்வாதி)|அமர் சிங் ]] ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இந்தப் படமானது விக்ரம் குமாரின் 2012 ஆண்டைய தெலுங்கு வெற்றிப் படமான '' இஷ்க் '' என்ற படத்தின் மறு ஆக்கமாகும். இந்தப் படத்தில் பிரபல நடிகை ஜெயப்ரதாவின் மகனான சித்து, [[ஹன்சிகா மோட்வானி]] ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். படமானது 2016 ஏப்ரல் 1 அன்று வெளியகி, ரசிகர்களிடம் மிகுதியான எதிர்மறை விமர்சனத்தை பெற்றது.<ref name="ibtimes">{{cite web|url=http://www.ibtimes.co.in/news/entertainment/kollywood/2016/04/01/uyire-uyire-review-round-critics-give-thumbs-down-hansika-motwani-starrer-672955|title='Uyire Uyire'movie review round up:Critics give a thumbs down to Hansika Motwani starrer|publisher=ibtimes|accessdate=5 April 2016}}</ref>
== கதை ==
நாயகன் ராகுல் (சித்து) மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார். அதே விமானத்தில் பிரியாவும் (ஹன்சிகா) பயணிக்கிறார். இவரை பார்த்தவுடனே காதல் வயப்படுகிறார் ராகுல். விமானத்தில் அருகருகே உட்கார்ந்து பேசி கொண்டு வருகிறார்கள்.
 
சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானம், மழை, வெள்ளம் காரணமாக கோவாவில் தரையிறங்குகிறது. கோவாவில் ராகுலின் நண்பனுக்கு திருமணம் நடைபெற இருப்பதால், அங்கு பிரியாவை அழைத்து செல்கிறார். அங்கு நண்பர்களிடம் பிரியாவை தன்னுடைய மனைவி என்று அறிமுகம் செய்து வைக்கிறார்.
 
அன்று இரவு தனியாக கடற்கரையில் இருக்கும் பிரியாவை, ஒரு கும்பல் கற்பழிக்க முயற்சி செய்கிறது. இந்த கும்பலிடம் இருந்து பிரியாவை காப்பாற்றுகிறார் ராகுல். இதிலிருந்து பிரியாவுக்கு ராகுல்ச மீது காதல் ஏற்படுகிறது. இருவரும் காதலை சொல்லாமல் இருந்து வருகிறார்கள்.
 
ஒரு வழியாக சென்னைக்கு வரும் இவர்கள், அங்கு பிரியாவிடம் தன் காதலை சொல்ல ராகுல் முயற்சி செய்கிறார். அப்போது, பிரியாவை அழைத்து செல்ல வரும் பிரியாவின் அண்ணன் சிவாவை (அஜய்) பார்த்தவுடன் அதிர்ந்து போகிறார். பிரியாவின் அண்ணன் சிவாவை மூன்று வருடங்களுக்கு முன்பு, ராகுலின் அக்காவான திவ்யாவை (சாயாசிங்), காதல் என்ற பெயரில் துன்புறுத்தியதற்காக அவரை அடித்திருக்கிறார். இதனால் சிவாவுக்கும் ராகுலுக்கும் முன்பே பகை இருந்து வருகிறது.
 
ஒருகட்டத்தில் பிரியா ராகுல் மீது ஏற்பட்ட காதலை வெளிப்படுத்துகிறார். இந்த காதலுக்கு அவரது அண்ணன் சிவா எதிர்ப்பு தெரிவிக்கிறார். இறுதியில், சிவாவை எதிர்த்து பிரியாவை ராகுல் எப்படி கரம்பிடித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
 
 
== நடிகர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/உயிரே_உயிரே" இலிருந்து மீள்விக்கப்பட்டது