ஒற்றைச்சர்க்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 9:
===சங்கிலித் தொடர் ஒற்றைச்சர்க்கரைகள்===
எளிய ஒற்றைச் சர்க்கரைகள் பக்கத்தொடரற்ற நேர்கோட்டு அமைப்புடன் [[கார்பனைல்]] (C=O) [[வேதி வினைக்குழு]]வினையும் மற்ற கார்பன் அணுக்கள் ஒவ்வொன்றிலும் ஒரு [[ஐதராக்சைல்]] தொகுதியையும் கொண்ட கார்பன் சங்கிலித் தொடரைக் கொண்டுள்ளன, ஆக, ஒரு எளிய ஒற்றைச் சர்க்கரையின் மூலக்கூறு அமைப்பானது, H(CHOH)<sub>''n''</sub>(C=O)(CHOH)<sub>''m''</sub>H, (''n'' + 1 + ''m'' = ''x''என இருக்கும் போது); ஆகவே இதன் தனிம எண்ணிக்கையிலான வாய்ப்பாடானது C<sub>''x''</sub>H<sub>2''x''</sub>O<sub>''x''</sub> ஆகும். ஒற்றைச்சர்க்கரைகள் [[கார்போவதைரேட்டு|கார்போவதைரேட்டுகளில்]] காணப்படும் எளிய அலகுகளாகவும், சர்க்கரையின் எளிய வடிவமாகவும் உள்ளன கார்பனைல் தொகுதியானது 1 ஆவது கார்பனுடன் (அதாவது, ''n'' அல்லது ''m'' சுழியற்றதாக இருக்கும் போது), இருந்தால் மூலக்கூறானது ஒரு [[பார்மைல்]] தொகுதியுடன் H(C=O)− அதாவது ஒரு [[ஆல்டிகைடு|ஆல்டிகைடாக]] அமைகிறது. அத்தகைய நேர்வில், இச்சேர்மமானது [[ஆல்டோசு]] என அழைக்கப்படுகிறது. அவ்வாறின்றி, மூலக்கூறானது [[கீட்டோன்]] தொகுதியை, ஒரு கார்பனைலை −(C=O)− இரண்டு கார்பன் அணுக்களுக்கிடையில் கொண்டிருந்தால் அது கீட்டோசு எனப்படும், உயிரிய முக்கியத்துவம் வாய்ந்த கீட்டோசுகள் வழக்கமாக 2 ஆம் இடத்தில் கார்பனைல் தொகுதியைக் கொண்டிருக்கும், திறந்த சங்கிலித் தொடர்களைக் கொண்ட ஒற்றைச்சர்க்கரைகளுக்கான மிகப்பொதுவான பெயரிடும் முறையானது கார்பன் அணுக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் டிரை, டெட்ர், பென்ட், எக்சு போன்ற முன்னொட்டுகளையும் மற்றும் ஆல்டோசுகளுக்கு "-ஓசு" என்ற பின்னொட்டையும் கீட்டோசுகளுக்கு உலோசு என்ற பின்னொட்டைக் கொண்டு முடிவதாக இருக்கும்.<ref>{{cite web|title=Carbohydrates|url=http://www.rsc.org/Education/Teachers/Resources/cfb/Carbohydrates.htm|website=Chemistry for Biologists|publisher=Royal Society of Chemistry|accessdate=10 March 2017}}</ref>
 
=== ஒற்றைச்சர்க்கரைகளும் சீர்மையற்ற கார்பன் அணுக்களும் ===
டைஐதராக்சிஅசிட்டோனைத் தவிர இதர ஒற்றைச்சர்க்கரைகள் அனைத்துமே சீர்மையற்ற கார்பன் அணுக்களைக் கொண்டுள்ளன. சீர்மையற்ற கார்பன் அணுக்களின் இருப்பின் காரணமாக அவை ஒளியியல் பண்பைக் கொண்டு முப்பரிமாண மாற்றியங்களை வெளிப்படுத்துகின்றன. எளிய ஒற்றைச்சர்க்கரையான கிளிசரால்டிகைடு ஒரே ஒரு நாற்தொகுதி மையத்தைக் கொண்டு இரு ஒளியியல் மாற்றியங்களை அமைக்கின்றன. அதாவது, வலஞ்சுழி (D-)மற்றும் இடஞ்சுழி (L-) வகை மாற்றியங்களைக் கொண்டுள்ளன. D- மற்றும் L- வகை மாற்றியங்களை இருபரிமாணமாகத் தாளில் குறிப்பிட பிசரின் வீழ்ப்பு வாய்ப்பாட்டைப் பயன்படுத்தலாம்.<ref>http://www.easybiologyclass.com/monosaccharides-definition-structure-characteristics-classification-examples-and-functions/</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஒற்றைச்சர்க்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது